உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 125 பிரதமர் பதவியிலிருந்து நீக்கியபோதும், ராஜீவ் தன்னம்பிக்கையையும்; மக்களிடம் அவர் கொண் டுள்ள நம்பிக்கையையும் இழக்கவில்லை. மனம் தளராமல் மக்களை இடைவிடாமல் சந்தித்தார். அவர்களது குறைகளை கவனமாகக் கேட்டு அறிந்து கொண்டார். தன்னிடம் மக்கள் கண்ட குறையைப் போக்கிக் கொள்ள கடுமையாக உழைத் தார். மக்களை நம்பினார். 1989 வரை ராஜீவ்காந்தி ஆட்சி செய்த ஐந்து வருடங்களும், நவீன இந்தியாவை உருவாக்குவ திலேயே அவர் முழுக்க முழுக்க கவனம் செலுத் தினார். 21-ம் நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்ல நவீன இந்தியாவை உருவாக்கப் போவதைப் பற்றி அடிக்கடி பேசினார் அதன்படியே செயலாற்றவும் முனைந்தார். புதிய பொருளாதாரக் கொள்கைகள் மூலம் குறைந்த கட்டுப்பாடுகளுடன், கம்ப்யூட்டர்கள், நவீன யந்திரங்கள், ஆகியவற்றை தாராளமாக்கி னார் கட்சித்தாவல் தடைச் சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தார். பஞ்சாப், மிசோராம், அசாம் என்று அடுத் தடுத்து புதிய ஒப்பந்தங்களை மேற் கொண்டார். ராஜீவ்காந்தியின் அயல் நாடுகளுடனான உறவு