126 மகாத்மா காந்தி முதல் உலகையே பிரமிக்க வைத்தது. ரஷிய அதிபர் கோபர்சேவுடன் தனிப்பட்ட முறையில் நட்பை வளர்த்துக் கொண்டார். அதேசமயம், ரொனால்டு ரீகனுடன் கொண்ட நட்பின் மூலம், அமெரிக்கா வையும் கவர்ந்தார். தெற்கு ஆசிய நாடுகளுடன் மிகுந்த ஒத்துழைப்புக் காட்டினார். ராஜீவின் வேகம் நிறைந்த இந்த அடுக்கடுக் கான, செயல்களின் விளைவாக உலக அரங்கில் இந்தியாவின் புகழ், முன் எப்போதும் கண்டிராத அளவிற்கு திடீரென உயர்ந்துவிட்டது. இதற்கு மூலகாரணமாக அவருக்கு உதவியது; ராஜீவ்மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையும்; அவருக்கு மக்கள் அளித்த பேராதரவும்தான். ஆனால் ராஜீவ்காந்தி என்றும் தனிமனிதன்எத்தனை உயர்ந்த பண்பாளனாக இருந்தாலும் அரசிரலுக்கு வந்தவிட்ட பிறகு-அவதூறுகளுக்கும் ஆளாக வேண்டியதுதான். தன்னைச் சார்ந்தவர்களின் சொல்லை ராஜீ வால் அலட்சியப்படுத்த இயலவில்லை. அவர்களது ஆலோசனைகளை புறக்கணிக்க முடியாத சூழ் நிலையில் ராஜீவ் சில தவறுகளை சந்திக்க நேரிட்டது. பஞ்சாப் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட பிசகு, ஷாபானு வழக்கு அதைவிட
பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/128
Appearance