பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 129 உற்சாகமாக மகிழ்ச்சியுடன் பேட்டி அளித்தார். அதுவே அவரது கடைசிப் பேட்டி என்பது அப்போது யாருக்குத் தெரியும்? பேட்டியின் போது ராஜீவ் காந்தி "இந்தத் தேர்தலில் அதிகமான வன்முறைகள் ஏற்படும்”என்று குறிப்பிட்டார். அந்த வன்முறைக்குத் தானும் இரையாகக் கூடும் என்று அவரது உள்மனது அப்போது கூறியதோ என்னமோ! இதே போல் தான் ஜான் கென்னடி தான் சுட்டுக் கொல்லப் படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு டெக்ஸாஸ் நகரிலுள்ள லவ்ஃபீல்டு விமான நிலையத்தில் ஒரு பேட்டியின் போது பின்வருமாறு கூறினார். "உண்மையிலேயே அமெரிக்க ஜனாதிபதியை சுட்டுக் கொல்ல யாராவது விரும்பினால், அது ஒன்றும் அவ்வளவு கஷ்டமல்ல. என் உயிருக்கு விலையாகத் தன் உயிரைத் தர ஒரு கொலைகாரன் முடிவெடுத்தால் போதும்; நான் பிணமாவேன்.” கென்னடி இப்படிக் கூறுவதற்கு முன்பே அவர் விதி நிர்ணயிக்கப்பட்டு விட்டது. டெக்ஸாஸ் நகர வீதியில் அவர் காரில் சென்ற போது ஆறாவது மாடியிலிருந்து ஒரு கொலைக் காரன் அவரைச் சுட்டுக் கொன்றான்.