பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜிவ் காந்தி வரை கடைசியில் பரீட்சை முடிந்தது. 1 ; : ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி கர்: 'ನ್ತಿ। fஸ்டர் H ఫ్రో பாாஸ்டா ஆனாா. * *, ‛፡ ፳፰.. நான்கு வருட சட்டப் படிப்பை முடித்து:): கொண்டு பெற்றோரைப் பார்க்கும் ஆவலுடன் 1891-ல் காந்திஜி இந்தியா திரும்பினார். ஆனால் -இங்கு வந்த பிறகு தான் அவரது அருமை அன்னை புத்லிபாய் இறந்து விட்ட செய்தி அறிந் தார். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தான் அவருடைய தந்தையும் காலமாகி விட்டார். இப்போது காந்திஜிக்கு தாயும் இல்லை; தந்தையும் இல்லை. அம்மாவைப் பார்க்க வேண்டும்; தான் பாரிஸ்டர் ஆகி விட்டதையும்; அவளுக்குச் செய்து கொடுத்த சத்தியத்தையும் தவறாமல் நிறை வேற்றியதையும் சொல்லி தாயை ஆனந்தமடையச் செய்யவேண்டும் என்று எவ்வளவோ ஆவலாக வந்தார் பாவம்! o பெற்றோரை இழந்த துயரத்தை காந்திஜி மெல்ல மறக்கப் பழகினார். அடுத்த சில வருடங் களில் ராஜ் கோட்டிலும், பம்பாயிலுமாக மாறி மாறி ஒரு வக்கீலாகத் தொழில் நடத்தினார். தொழில் சிறப்பாக நடக்கவில்லை; மேலும் அது அவரது மனதிற்கும் பிடிக்கவில்லை. ஆயினும் பொய்யின்றி, தன் மனதிற்குச் சத்தியமாகப் படு கின்ற வழக்குகளை மட்டுமே ஏற்று நடத்தினார் இந்த சமயத்தில்