பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாத்மா காந்தி முதல்

  • தென்னாப்பிரிக்காவிலிருந்து தனது கம்பனி இார விஷயமாக கலந்தாலோசிக்க அப்துல்லா یعنی

ன்பவர் காந்திஜியை அழைத்தார். காந்திஜி மகிழ்ச்சியுடன் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார். அப்போது அவருக்கு வயது 22. அங்கு சென்றதும் தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மிகவும் குறைந்த கூலிக்கு கடினமான வேலைகளைச் செய்து கொண்டும்; நிற வேற்றுமை காரணமாக - வெள்ளையர்களால் "இந்திய கூலிகள்', என்று கேவலமாக நடத்தப் படுவதையும் நேரில் கண்டார். அந்த மக்களின் துயர் துடைக்க அவர் மனம் தவித்தது. - நாளடைவில் காந்திஜி அங்குள்ள, இந்தியர் களின் வக்கீலானார். சட்டங்கள் எதுவும் இந்திய ருக்குச் சாதகமாக இல்லை. காந்திஜியைக் கூட, "கூலிகளின் வக்கீல்", என்று தான் வெள்ளையர் அழைத்தனர். தென்னாப்பிரிக்கா வந்த முதல் வாரத்தில் காந்திஜி டர்பனிலுள்ள நீதி மன்றத்திற்குச் சென்றார். காந்திஜி கீழே சூட்டும்; தலையில் தலைப்பாகையும் வழக்கம் போல் அணிந்து வந்தார். ஆனால் நீதிமன்ற அறைக்குள் போனதும் மாஜிஸ்திரேட் காந்தியிடம், உடனே தலைப் பாகையை அகற்றும்படிக் கட்டளை இட்டார்.