பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாத்மா காந்தி முதல் ! Υστ செயல்களைக் கொண்டவர்களிடமும் fக்கப் படுத்தினார். ഴ്സ്. ஆசிரியராக காந்திஜி மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளு வதற்கு பத்திரிகை ஒரு சிறந்த சாதனம். இதை காந்திஜி நன்கு உணர்ந்திருந்தார். இந்தியர்களைப் படுமோசமாக நடத்தும் தென்னாப்பிரிக்க அரசைக் கண்டித்து எழுத, ஜோகனிஸ் பர்க்', என்னும் நகரத்திலிருக்கும் போது, இந்தியன் ஒபீனியன்” என்னும் ஒரு பத்திரிகையை காந்திஜி முதன் முதலில் துவக் தினார். 1919-இல், "யங் இந்தியா' 'நவ ஜீவன்”, என்னும் பத்திரிகைகளைத் து வ க் கி னா ர். 'ஹரிஜன்", "ஹரிஜன் சேவக்”, 'ஹரிஜன் பந்து' போன்ற தேசிய வார ஏடுகளில் ஒவ்வொரு வாரமும் நடந்தவற்றையும்; நடக்க வேண்டிவை பற்றிய தம் கருத்துக்களையும் மக்களுக்குத் தெளி வாக எடுத்துக் கூறினார். விலைக்கட்டுப் பாட்டின் அவசியம், "அமைதி காத்தல்', 'அன்னியத் துணிகளை தீண்டாமல் ஒதுக்கி, அவற்றை தீயிலிட்டுப் பொசுக்கும் திட்டம்' போன்ற பல பிரச்னைகள் குறித்து எழுதி மக்கள் கடமையை உணர்த்தினார். காந்தி ஜியின் எழுத்து மக்களை தட்டி எழுப்பின.