பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாத்மா காந்தி முதல் ந்நூல் காந்திஜியின் கையெழுத்தில் 275, நீகங்களையுடையது. காந்திஜி கண்காட்சியில் இடம் பெற்றுள்ள இந்நூலில்; மூன்றே இடங்களில்தான் அடித்தல் இருக்கிறது என்பதைக் காணும்போது, காந்திஜி யின் திடசித்தத்தையும், தெளிவான சிந்தனை யையும் கண்டு வியக்காமல் இருக்க முடியுமோ? தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கிய தங்தை தான் பிறந்த நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்த காந்தி மகான்; அது மட்டுமே தம் பணி என்று கருதவில்லை. இனம், மதம். மொழி இவற்றை மறந்து இந்தியாவிலுள்ள கோடானு கோடி மக்களும் சகோதரர்போல் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று கனவு கண்டார். தான் எண்ணியதையே செயலில் காட்டி தேசிய ஒருமைப் பாட்டை வளர்த்தார். எந்த மொழி பேசுபவராக; எந்த மாநிலத்தில் பிறந்தவராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் இந்தியச் சகோதரர் என்கிற எண்ணத்தை மக் களுக்கு ஊட்டினார். அதையே தம் வாழ்வின் இலட்சிய மூச்சாகவும் கடைப்பிடித்து வந்தார். இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக காந்திஜி கால மெல்லாம் பாடுபட்டார். அதற்காக அவர் மேற்