பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை ஆழ்ந்திருந்த போது காந்திஜி உபவாசம் இல் தார். அதோடு மட்டுமல்ல; தன்னோடு கூட இருந்: தவர்களையும் உபவாசம் இருக்கும்படிக் கூறினார்: அப்போது அருகில் இருந்த மனுகாந்தி. மகாத்மாவைப் பார்த்து, 'பாபுஜி! இன்று சுதந்திர நன்னாள். அதை ஈட்டுத் தந்த உங்களுக்கு நாங் கள் மகிழ்ச்சியோடு இனிப்பு வழங்க வந்துள்ளோம். இன்று உபவாசம் இருக்கிறீர்களே,” என்று கேட் டார். அதற்கு மகாத்மா, மனுகாந்தியை நோக்கி "நான் எனது பிறந்த நாள்; கலியான நாள் ஆகிய நல்ல தினங்களில் உபவாசமே இருக்கச் சொல்வதுதான் வழக்கம். அது உனக்குத் தெரியா தது அல்லவே! இன்றுமுதல் நம்முடைய பொறுப்பு எவ்வளவு அதிகமாக இருக்கிறது! ஏகாதசி உபவா சத்தினால் மனம் கடவுள் பக்தியில் திரும்புவதைப் போல, இன்றைய உபவாசத்தினால் நமக்கு நம் பொறுப்பைப் பற்றிய உ ண ர் ச் சி ேய ஏற்படும். நமக்கு சுதந்திரம் அளித்த ஆயுதம் ராட்டை, அதை நாம் இன்று எப்படி மறக்க முடியும்? இன்று இறைவனிடம் நம்முடைய பிரார்த்தனை, "சுதந்திரம் பெற்றுவிட்ட பெருமை யில் கர்வம் அடைந்து விடாதபடி என்னைக் காப் பாற்று; பொறுப்பு உணர்ச்சியையும் பணிவையும் எனக்குக் கொடுப்பாய் என்று வேண்டுவதாகவே இருக்க வேண்டும்' என்று சொன்னார்.