பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 49 அத்தியாவசியமாகத் தேவையான ஒரு பொருள் என்றாலும், பணத்திற்காக அவர் என்றும், தன் மனச்சாட்சியின் உத்தரவினின்றும் விலகிச் சென்ற தில்லை. நீதி, நேர்மை, இவற்றுக்காக மட்டுமே வழக் காடி வந்தார். பொய்யான வழக்குகளின் மீது வாதாட எவ்வளவு பொருள் கொடுத்தாலும் லிங்கன் அதை ஒரு போதும் ஒப்புக் கொண்ட தில்லை. நியாயமான வழக்காக இருந்தால், பண மில்லாத ஏழைக்காகவும் அவர் வாதாடுவார், லிங்கனுக்கு நண்பர்கள் அதிகமானார்கள் 1843-ம் ஆண்டு தன் நண்பரான வில்லியம் ஹெர்டன் என்னும் வழக்கறிஞரோடு கூட்டுச் சேர்ந்து வக்கீல் தொழிலை அபிவிருத்தி செய்து கொண்டார். தமது வழக்கை தெளிவாக எடுத்துரைக்க இவர் நீதிபதிமுன் அழகான கதைகள் சொல்வது வழக்கம். இவர் கூறும் கதைகள் வழக்கை விளக்க உதவு வதோடு மட்டுமின்றி, கேட்பதற்கு மிகவும் மகிழ்ச் சியும், சிரிப்பும் ஊட்டுவதாக இருக்கும். லிங்கன் வழக்கு மன்றத்திற்கு வருகிறார் என் ஹால், சகல வக்கீல்களுக்கும், பார்வையாளர்களுக் கும், நீதிபதிக்குமே கூட மகிழ்ச்சியாக இருக்கும். r.