பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

FA so = - 52 மகாத்மா காந்தி முதல களை ஆயுள் அடிமைகளாக குறைந்த விலைக்கு ஆங்கிலேயர்கள் விற்று வியாபாரம் செய்து பிழைத்து வந்தனர். கடினமான, முரட்டு வேலைகளுக்கு ஏற்ற மனிதன் என்று பண்ணை முதலாளிகள் நீக்ரோக் களை வாங்கிப் பெருக்கினர். இந்த அடிமைகளை பண்ணை முதலாளிகள்ஆடு மாடுகளுக்காவது சிறிது துரம் தன்னிச்சை யாகச் செல்லும் சுதந்திரம் உண்டு; இந்த அடிமை மனிதர்களுக்கு அந்த சுதந்திரம் கூட வழங்காமல், வாட்டி வதைத்து வேலை வாங்கினார்கள். வாயில்லாப் பூச்சிகளான அந்த அடிமை நீக்ரோக்கள் இப்படி ஏன் விற்கப்படுகிறோம். என்கிற சிந்தனை கூட இன்றி-விலைகொடுத்து வாங்கிய பண்ணை முதலாளிகளுக்காக உயிரை விட்டு இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத் தனா. t -- -- - m - அப்படி உழைக்க மறுப்பவர்களை வெட்டி வீசினாலும் ஏன் என்று கேட்க அங்கு எவரும் இல்லை. இந்த ஆயிரக்கணக்கான அடிமைகள் மட்டும் அமெரிக்காவுக்கு வராமற்போனால் அந்தத் தென்பகுதி இப்படிச் செழிப்பான பண்ணைகளினாலும், வளமான தொழிற் பெருக் கத்தாலும், ஒருபோதும் செல்வம் கொழிக்கும் நாடாகச் சிறந்து விளங்கியிருக்க முடியாது.