பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 மகாத்மா காந்தி முதல் அதற்குள் ஜப்பானிய நாசகாரக் கப்பல் கென்னடியின் பி. டி. படகை நோக்கி வேகமாக முன்னேறி பீரங்கிகளால் தாக்கத் துவங்கின. பி. டி. படகு நிலைகுலையத் துவங்கியது. கண்காணிப்புப் படகின் த ைல வ ரா ன் கென்னடி, தன்னுடனிருந்த நண்பர்களை எதற்கும் தயாராகும்படி எச்சரித்தார். அடுத்த வினாடி ஜப்பானியக் கப்பலிலிருந்து புறப்பட்டு வந்த பீரங்கி குண்டு தாக்குதலில் கென்னடியின் படகு தீப்பற்றி எரிந்தது. கென்னடியுடன் இருந்த கப்பற்படை வீரர்கள் கடலில் தூக்கி எறியப் பட்டனர். மற்றவர்களோடு கடலில் விழுந்த கென்னடி இறக்கப் போகிறாம் என்கிற நினைப்போடு தண்ணிருக்கு மேல் தலையைப் துக்கிப் பார்த் தார். ஒன்றுமே அறியாததுபோல் ஜப்பானிய நாச காரக் கப்பல் தூரத்தே போய்க் கொண்டிருந்தது. சட்டென்று தன்னருகே மிதந்து வந்த படகின் நீளமான ஒரு மரத்துண்டை கென்னடி நீந்திச் சென்று தாவிப் பிடித்துக் கொண்டார். ஒரு மரத்துண்டின் பாதுகாப்பில் இருந்த கென்னடி, தனது நண்பர்கள் யாராவது