பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 69 தெரிகிறார்களா என்று சுற்றும் மு ற் று ம் பார்த்தார். ஒவ்வொருவர் பெயரையும் சொல்லி அழைத் தார். அறுவர் பதில் குரல் கொடுத்தனர். இரு நண்பர்கள் இறந்த உடல் தெரிந்தது. கென்னடி மனம் வருந்தி பிரார்த்தனை செய்தார். மற்றவர்களைப் பற்றிக் கவலை கொண்டார். மக்மகான் என்ற சகமாலுமி தீக்காயத்துடன் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார். ஹாரிங் என்ற மற்றொரு நண்பர் காலில் பட்ட காயத்தினால் நீந்த முடியாமல் தத்தளித்தார். கண்காணிப்புப் படகின் தலைவராயிருந்த கென்னடி தனது முதுகு வலியையும் மறந்து மிகச் சிரமப்பட்டு அவர்கள் இருவரையும், உடைந்து மிதந்த தன் படகின் பகுதிக்குக் கொண்டு வந்தார். மீதமுள்ளவர்களையும் காப்பாற்ற கென்னடி யின் கண்கள் கடலெங்கும் துழாவிக் கொண் டிருந்தன. கண்ணில் பட்ட ஒவ்வொருவராய் பதினோரு வீரர்களைக் காப்பாற்றினார். பொழுது விடிந்து விட்டது. ஆயினும் உதவிப் படகுகள் எதுவும் வந்து சேரவில்லை. நேரம் ஆக ஆக அவர்கள் இருக்கும். படகுத் துண்டும் நீரில் அமிழத் துவங்கியது.