பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மகாத்மா காந்தி முதல் தமது 42-வது வயதில் கென்னடி அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு மகத்தான வெற்றினார். இந்த பதவியின்போது கென்னடியின் ஒவ் வொரு செயல்களும், பெருமைமிக்கதாகவும் மணி தாபிமானம் மிக்கதாகவும், அமெரிக்காவின் பெருமையை உயர்த்தும் விதத்திலும் இருந்தன. உலகின் கவனமே அமெரிக்காவின் பக்கம் திரும்பும் அள்விற்கு கென்னடியின் பணிகள் ஒவ்வொன்றும் இருந்தன. போரை ஒழித்து, நிரந்தரமான அமைதியை நிலைநிறுத்தப் பாடுபட்டார். நீக்ரோ மக்களுக்கு, சட்டப்படி சிவில் உரிமைகள் கிடைக்க வகை செய்தார். இந்தியாவின் ந ண் பராக மட்டுமின்றி, அனைத்து நாட்டுடனும், நட்புரிமையுடனேயே பழகினார். "நாடு நமக்கு என்ன செய்தது என்று கேட்பதை விட, நாட்டுக்கு நாம் என்ன செய் தோம் என்று முதலில் கேட்டுக் கொள்வது நல்லது” என்பது கென்னடியின் கருத்து. அனைவரையும் சமமாகப் பாவித்துப் பழகும் இயல்புடையவர் கென்னடி. அமெரிக்காவில்