பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 77 வாழும், கோடிக்கணக்கான நீக்ரோக்களின் நலனின் அக்கரை காட்டினார். இதனால் உள் நாட்டிலேயே அவர் மீது பலருக்கு வெறுப்பும் துவேஷமும் உண்டாயிற்று. இந்நிலையில் கென்னடி டெக்ஸாஸ் மாநிலத் திற்கு தன் மனைவி ஜாக்குலினுடன் சுற்றுப் பயணம் மேற் கொண்டார். அங்கு அவருக்கு எதிர்ப்பு அதிகம் என்று எச்சரிக்கப்பட்டும் கென்னடி அதற்காக அஞ்ச வில்லை. 1963-ம் ஆண்டு நவம்பர் 22ம்தேதி டெக்ஸாஸ் நகரத்திலுள்ள லவ்ஃபீல்டு விமான நிலையத்தில் தன் மனைவியோடு வந்திறங்கிய கென்னடி பலத்த மகிழ்ச்சி ஆரவாரத்தோடு வரவேற்கப்பட்டார். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த கென்னடியும், ஜாக்குலினும் டெக்ஸாஸுக்கு காரில் பயணமானார்கள். வீதியில் இரு பக்கமும் இருந்த மக்கள் கையசைத்து மகிழ்ச்சி தெரிவித்தனர். டெக்ஸாஸ் மக்களின் குதுகல ஆரவாரம், கென்னடியின் மனதைத் தொட்டது. வண்டி ஒரு மூலையில் திரும்பிய போது, தெரு முனையிலிருந்த ஆறு மாடிக் கட்டிடம் ஒன்றின்