பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மகாத்மா காந்தி முதல் ஆளுக்கு ஒரு நீதி என்பதை ஒரு அவமான மாகக் கொண்டு சட்டங்கள் அனைத்தும் சகலருக் கும் சமமாக்கப்பட வேண்டும். ஒற்றுமையாய் வாழ்வோம்; ஒன்றுபட்ட அமெரிக்காவை உருவாக்குவோம்” இவையே மார்டின் லூதர் கிங்கின் லட்சியக் கனவுகளாகத் திகழ்ந்தன. மனித உரிமைக்காகப் போராடிய அந்த மாமனிதரின் உன்னதக் கனவு அவரது காலத்திலேயே படிப்படியாகப் பலிக்கத் தொடங்கி விட்டது. இன்றைய அமெரிக்கா மார்டின் லூதர்கிங் கண்ட பொற் கனவை, பூரணமாக நினைவாக்கி விட்டது. அதற்கு அடையாளமாக அமெரிக்க ஜனாதிபதி யின் ஆணைப்படி லூதர் கிங்கை கெளரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மூன்றாவது திட்கட் கிழமையை தேசிய தினமாக', அமெரிக்க அரசு கொண்டாடி வருகிறது. ஒரு புதிய சகாப்தம் பிறந்தது அமெரிக்காவில் நீக்ரோ மக்கள் வசிக்கும் 'அட்லாண்டா, என்னும் ஊரில் 1929-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி மார்டின் லூதர் கிங் பிறந்தார். . .