பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 மகாத்மா காந்தி முதல் அங்குதான் அவர்-1968-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதியன்று - வெள்ளையர் ஒருவனின் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது மார்டின் லூதர் கிங்கின் வயது 39 தான். கிங்கினைச் சுட்டுக் கொன்ற ஜேம்ஸ் ஏர்ஸ்ரே என்ற வெள்ளையருக்கு 99 ஆண்டு சிறைத் தண் E__ @j) 30 f விதித்து நீதி மன்றம் தீர்ப்பளித்தது. அந்த கொலையாளி ஏற்கனவே சிறையிலிருந்து தப்பிஓடி வந்தவன் என்பதும் இவ்வழக்கின் போது தெரிந்தது. கிங் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து நீக்ரோ இன மக்கள் கோபமும், ஆத்திரமும், வருத் தமும் அடைந்தனர். கொதித்தெழுந்த மக்களின் அட்க்க முடியாத கோபாவேசத்தால், 100 நகரங் களில் கலகமும், அமளியும் ஏற்பட்டது. ஏழை நீக்ரோ மக்களின் எதிர்கால நல்வாழ் விற்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய,கிங்கின் மறைவால் உலகமே துயரமுற்றது. ஏழை மக்களின் உரிமைகளுக்கு குர ல்கொடுத்த ஒர் உத்தமர் உயிர்த்தியாகம் செய்தார் என அனைத்து இன மக்களும் கண்ணிர் விட்டனர். இங்கின் கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம் இது தான்: