பக்கம்:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5


இருந்தனர் ஆள்வதற்கு அடிமை இந்தியாவை வெளியே அவர்கள் போகும் காட்சியைப் பார்த்துவிட்ட பிறகே, உத்தமர் உயிர் நீத்தார்.

இவ்வளவையும், அவர் மந்திரக் கோல் கொண்டோ, யாக குண்டத்தருகே நின்றோ சாதிக்கவில்லை - மக்களிடையே வாழ்ந்து, மக்களின் மகத்தான சக்தியைத்திரட்டிக் காட்டிச் சாதித்தார். புதிய வாழ்வு தந்தார். புதிய அந்தஸ்து தந்தார்.

இவ்வளவு தந்தவருக்கு, அந்தத் துரோகி தந்தது மூன்று குண்டுகள். சாக்ரடீசுக்கு விஷம் தந்ததுபோல.

அவர் சாதித்தவைகள் மகத்தானவை. ஆனால் அவர் சாதிக்க எண்ணியிருந்தவை வேறு பல. அவை மேலும் மகத்தானவை.

நாட்டிலே உள்ள மற்றக் கொடுமைகள் : ஜாதிச்சனியன், வறுமை, அறியாமை, ஆகியவற்றை அடியோடு களைந்தெறிந்துவிட்டு, உலகினர் கண்டு பின்பற்றத்தக்க முறையிலே, உன்னதமான இலட்சியங்களைக் கொண்ட ஓரு சமுதாயத்தைக் காண விரும்பினார். அதற்காக அரும்பாடுபட்டு வந்தார். அந்த நேரத்தில், ஆத்திரத்தால் அறிவை இழந்தவனால் அவர் கொலை செய்யப்பட்டார்.

அவர் கண்ட, அந்த நாள் இந்தியா, வீரர்களைக் கோழையாக்கிவிடக் கூடியது. விவேகிகளை வீசாரத்தி வாழ்த்தக் கூடியது. முப்பது கோடிக்கு மேற்பட்ட மக்கள் அவர்களின் முதுகெலும்பு முறிந்தது போலிருந்து அடிமைச் சுமையினால் நம்பிக்கை தகர்ந்து போயிருந்த நேரம்.

முடிதரித்த மன்னர்களெல்லாரும் ஆங்கில ஆட்சியின் பிடியிலே, கோட்டை கொத்தளம் கட்டிக் காத்தவர்களெல்லாரும் நாட்டை இனி மீட்டிட முடியாது, என்றெண்ணி வாட்டமுற்றுக் கிடந்தனர். எப்படியோ ஆட்சி