பக்கம்:மகான் குரு நானக்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

மகான் குருநானக்


"பூணூல் அணிபவர்களே! சாதாரண பருத்தி நூலை அணியாதீர்கள். அதனால் எந்தவிதமான பயனுமில்லை. இரக்கம் என்ற கருத்தியைக் கொண்டு மன நிறைவு என்ற நூலை தயாரியுங்கள். அதில் உண்மையென்ற முடிச்சுக்களைப் போட்டு அணிந்து கொள்ளுங்கள். உண்மையோடு வாழுங்கள், நல்வாழ்வு பெறுங்கள்" என்ற கருத்துக்கள் அந்தப் பாடலிலே இனிமையோடு மிதந்து வந்தன. அவர் பாடிய குரலோசை விழாவிற்கு வருகை தந்தோரை எல்லாம் இனிமையாக மகிழ்வித்தன.

நானக்கின் பெற்றோர்கள் தன் மகனை உதவாக்கரை என எண்ணினார்கள். ஒரே ஒரு நாள் தான் பள்ளிப் படிப்புக்கு போனார். அதோடு கல்வி முடிந்தது. பூணூல் விழாவாவது நடத்தலாம் என்று பெற்றேர் ஆசையோடு விழா செய்தார்கள். அதுவும் புரோகிதர் அறிவைச் சோதிக்கும் விழாவாக மாறியது. அதற்குப் பிறகு எந்த வேலையினையும் நானக் வீட்டில் செய்வதில்லை. எப்போது பார்த்தாலும் ஏதோ சிந்தனையில் மூழ்கியவரைப் போல, கண்களை மூடிக் கொண்டே அவர் அமர்ந்திருக்கும் காட்சி, பெற்றோர்களை வேதனை நெருப்பிலே தள்ளியது.

தனது மகன் நானக் நன்றாகக் கல்வி கற்று, ஏதாவது ஒரு சமஸ்தான்த்தில் உயர்ந்த பதவியில் அமர்ந்து பணியாற்ற வேண்டும். அவனை சுற்றி கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் வேலைக்காரர்கள் கூட்டம் சூழ்ந்திருக்க வேண்டும். தமது குடும்பம் பெருமையுடனும் புகழுடனும் வாழ வேண்டும். மகன் சிறந்த செல்வச் சீமானாகத் திகழ வேண்டும் என்று நினைந்த அவரது தந்தையாரின் ஆசையிலே தவறென்ன இருக்க முடியும்.

குருநானக்கின் பெற்றோர்கள் தன் மகனுக்கு தகுதியும், தரமும் இல்லாததைக் கண்டு அவனின் நண்பர்களின் சகவாசம் சரியில்லையென எண்ணினார்கள். மகன் இப்படி இருக்கிறானே என்பதற்காக ஒரு தகப்பனால் சும்மா இருக்க முடியுமா? அதனால்