பக்கம்:மகான் குரு நானக்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

மகான் குருநானக்


உடனே பண்டிதர் சத்குருவிடம், தனக்கு நல்ல வழிகளைக் கூறுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்ளவே. நானக் ஒரு பாடலை இசையுடன் பாடி, அதன் கருத்தை விளக்கினார். அதனால் மன அமைதி பெற்று பண்டிதர் வீடு திரும்பினார். அன்று முதல் மாயாஜால சக்தியையும், மந்திரங்களின் சக்தியையும் மறந்து, பண்டிதர் மனநிறைவு என்ற சாந்தியைப் பெற்று வாழ்ந்தார்.

காஷ்மீர் மக்களிடம் தனது ஞான உரைகளை ஆற்றிய பின்பு, அவர்கள் வாழ்க்கையில் உயர்வு பெறும் நெறிகளைப் போதித்து, இமயமலையின் அடிவாரத்திலே உள்ள மற்றொரு நாடான திபெத் பகுதிக்குத் தனது சீடர்களுடன் பயணமானார்.

திபெத் லாமாக்கள் இடையே சத்குரு

திபெத் நாட்டுக்கு குருநானக் வருகிறார் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட பெளத்த மதக் குருக்களின் தலைவரான லாமா, எல்லா ஏற்பாடுகளையும் செய்து வரவேற்றார்! சத்குரு நானக் ஓர் அவதார புருஷர் என்பதை தலைமை லாமா புரிந்து கொண்டார். அதனால், தனது மற்ற லாமாக்களுடன் சென்று, குரு நானக்கை அவர் எதிர்கொண்டு வரவேற்று, தங்களது மடங்களுக்கு அழைத்துச் சென்றார்கள். விருந்து வைபவங்களை நடத்தினார்கள்.

மதங்களிலே உள்ள உண்மைகளை அவர்கள் கூடி உரையாடி, அதனால் பல அரிய கருத்துக்களை ஒருவருக்கு ஒருவர் உணர்ந்து மகிழ்ந்தார்கள். இறைவனைப் பற்றியும், அவருடைய படைப்பின் அற்புதங்கள் குறித்தும் சத்குரு பல பாடல்கள் மூலமாக அவர்களுக்கு விளக்கினார். அதைக் கேட்ட பெளத்த லாமாக்கள் வியந்தார்கள். சில சந்தேகங்களையும் கேட்டு அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

குரு நானக் தனது சீடன் மர்தானாவிடம் ரூபாய் இசைக் கருவியை வாசிக்கச் செய்து, அந்த இசையினால் இறைவழிபாடு செய்யும் இன்பத்தை லாமாக்களுக்கு விளக்கிக் காட்டினார்.

சில நாட்கள் லாமாக்கள் மடங்களிலே தங்கியிருந்த பின்பு, குருநானக் தாம் உருவாக்கி வரும் சீக்கிய மதத்தின் புனித, புதிய