பக்கம்:மகான் குரு நானக்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



10. தமிழ்நாட்டில் சத்குரு


த்குரு நானக் தாம் கண்ட புதிய வாழ்வியல் நெறிகளை சீக்கிய மதம் என்ற பெயரால் மக்களுக்கு வழங்கிட, கால் நடையாகவே மத்திய கிழக்கு நாடுகளான மெக்கா, மதினா, அரேபியா, பாக்தாத் போன்ற நகரங்களுக்கு எல்லாம் சென்று வந்தார்.

இமயமலைச் சாரல் பகுதிகளிலே உள்ள நாடுகளான காஷ்மீரம், திபெத் போன்ற நாடுகளுக்கும் சென்றார். அங்கும் தனது புதிய நெறிகளது தத்துவ விளக்கங்களை மக்களிடையே பரப்பினார்.

வட இந்தியப் பகுதிகளான பஞ்சாப், டெல்லி, அசாம் காமரூபம், கங்கை, யமுனை, சிந்து நதிகள் பாயும் வளமான சமவெளிப் பகுதிகளில் வாழும் மக்கள் இடையேயெல்லாம் சென்று தமது நெறிகளைப் போதித்தார்.

குருநானக் மத்திய கிழக்கு நாடுகளிலே வாழ்ந்த முஸ்லீம் பெருமக்களிடையேயும், திபெத் பகுதிகளிலே வாழும் பெளத்த மதத் தலைவர்களான லாமாக்களையும், அங்கு வாழ்ந்து வரும் புத்தமத மக்களையும், மானசரோவர், காஷ்மீரம், கைலாசம் மலைப் பகுதிகளிலே கடும் யோகங்களை இயற்றி வரும் இந்து மத மா முனிவர்களையும், யோகிகளையும் கண்டு தனது புதிய நெறித் தத்துவங்களை, நுட்பங்களைக் கலந்துரையாடியும், சென்ற இடங்களிலே எல்லாம் மதம், இனம், சாதி பேதங்களைப் பாராமல் மக்கள் மனத்திலே சமத்துவ நெறியையும் உருவாக்கி வட இந்தியா முழுவதும், அதற்கப்பாலுமாக வலம் வந்த ஒரு ஞானியாகத் திகழ்ந்தார்.

குருநானக் மேற்கண்டவாறு வட இந்தியப் பயணங்கள் சென்றபின்பு, இந்தியாவின் தென்பகுதிக்கும் சென்று வர