பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

478

அறத்தின் குரல்


“துரோணா! உனக்கு ஓர் உண்மையை அறிவுறுத்தி விட்டுச் செல்வதற்காக நாங்கள் வந்திருக்கின்றோம். நீ ஓர் அந்தணன் சாந்த குணத்தினால் சத்தியச் செயல்களைச் செய்து உண்மையின் வழியில் வெற்றியைப் பெற வேண்டியது உன் குல தருமம். தத்துவத்தையும் யோக ஞானங்களையும் மறந்து இப்படி மறப்போரில் இறங்குவது உன் போன்றவர்களுக்கு அழகு இல்லை . நாசக் கருவிகளான இந்த ஆயுதங்களையும், இந்தப் போரையும் விட்டுவிட்டுச் சத்திய சிந்தனையில் இறங்க வேண்டும் நீ . இதை உனக்கு நினைவூட்டிவிட்டுப் போவதற்காகவே நாங்கள் வந்தோம்” என்று கூறித் துரோணரை வாழ்த்திவிட்டுச் சென்றனர். துரோணருடைய மனம் அந்த முனிவர்களின் வார்த்தையால் மாறிவிட்டது. தான் வழி விலக இருந்தபோது தன்னை வலுவில் தடுத்தாட்கொண்டதற்காக அந்த முனிவர்களுக்கு நன்றி செலுத்திவிட்டு ஆயுதங்களைக் கீழே வைத்தார் துரோணர். இதே சமயத்தில் இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கண்ணபிரான் ஒரு தந்திரம் செய்தார். ‘துரோணர் மோட்ச பதவி அடைய வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. அதை அவர் தவறாமல் அடைவதற்கு ஏற்பாடு செய்வோம்” என்று தனக்குள் நினைத்துக் கொண்டான். துட்டத்துய்ம்மனை அருகில் அழைத்தான்.

“நேற்றிரவு உன் தகப்பனாரைக் கொன்ற துரோணரை நீ பழிவாங்குவதற்கு இதுவே சரியான நேரம் போ போய்த் துரோணரோடு போர் செய்” என்று அவனை அனுப்பினான். துட்டத்துய்ம்மன் கண்ணன் ஏவலின் படி துரோணரோடு போருக்குச் சென்றான். துரோணரை மரணமடையச் செய்வதற்குத் தந்திரமான ஏற்பாடு ஒன்றைத் தீர்மானித்துக் கொள்வதற்காகக் கண்ணன் தருமர் இருந்த இடத்துக்குச் சென்றான்.

“தருமா! இப்போது நான் கூறப்போகிற தந்திரம் உன் மனத்துக்குப் பிடித்ததனாலும் பிடிக்காத்தானாலும் நீ அதை நிறைவேற்றித்தான் ஆகவேண்டும். மாளவ தேசத்தரசனும்