பக்கம்:மக்கட் செல்வம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. குழவி கொள்பவரின் ஓம்புமதி!



அன்புடைச் செல்வி மங்கையர்க்கரசி,

எனது முன்னைய கடிதம் சேர்ந்திருக்கும். அதில் குழந்தை இன்பத்தைப் பற்றிக் குறித்திருந்தேன் அல்லவா! அந்த இன்பத்தைக் காட்டிய அதே இலக்கியம் புறநானூறு மற்றொன்றையும் காட்டத் தவறவில்லை. மட்டற்ற இன்பத்தைப் பெற்றவருக்கு வாரி வழங்கும் குழந்தைச் செல்வத்தைப் போற்றி வளர்க்க வேண்டியது அப்பெற்றோர்களின் கடமை என்பதை அது நன்கு விளங்குகிறது. ‘பொருள்தனைப் போற்றி வாழ்’ என்பது தமிழில் வழங்கும் நல்ல பழமொழி. அதன் நிலைநின்று பெற்ற பொருளைப் போற்றிப் பாதுகாத்தால் தான் அது நிலைத்து நலம் பெற்று ஓங்கும். எல்லாப் பொருளுக்கும் இவ்வுண்மை பொருந்தும். எனவே பொருள்களில் பொருளாகிய குழந்தையை எவ்வாறு பாதுகாக்கவேண்டும் எனச் சொல்லவும் வேண்டுமோ? வள்ளுவர் குழந்தைச் செல்வத்தையே ‘தம்பொருள்