பக்கம்:மக்கட் செல்வம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழவி கொள்பவரின் ஓம்புமதி!

15


என்ப தம்மக்கள்’ என விளக்கிக் காட்டுகின்றார். அப்பொருளைப் போற்றி வளர்க்கவேண்டிய வகையினைப் பற்றி நீ நன்கு அறிந்து கொள்ளவேண்டும்.

பெற்ற தாய் குழந்தையைக் கண்ணும் கருத்துமாகப் போற்றி வளர்க்க வேண்டும். மழலைச் சொல்லாலும் தளர் நடையாலும் மகிழ்வூட்டும் இளமைச் செவ்வியும், பின் வளர்ந்து பெற்றவரை ஓம்பும் வாழ்க்கைப் பண்பும் ஒருசேர, பெற்ற அக்குழந்தையின் வளர்ப்பை ஒட்டியே வளம் பெற்றதாக அமையும். எனவே பெற்றதாய் குழந்தையை வளர்ப்பதிலேயே அதன் வருங்கால முழுதும் அடங்கி இருக்கிறது. அதன் வருங்காலம் மட்டுமன்று; தாயின் வருங்காலமும் பிற சுற்றத்தார் வருங்காலமும் கூடத்தான். ‘தன் மகனைச் சான்றோன் எனக் கேட்க’ வேண்டுமாயின் தாய் தன் குழந்தையை எத்தனையோ வகையில் போற்றி வளர்க்கத்தான் வேண்டும்,

அன்பின் செல்வி!

இந்த இருபதாம் நூற்றாண்டில் ஒரு சிலர் நாகரிகம் என்னும் பேரால் தம் குழந்தைக்குப் பாலூட்டுவதும் வேண்டா என நிறுத்தி, குழந்தைச் செல்வத்திலும் தம் அழகுச் செல்வத்தையே பெரிதென மதிக்கின்றனர். அவர் தம் வாழ்வு இயற்கைக்கு மாறுபட்ட வாழ்வேயாகும். தாய்மை இன்பத்தின் முதற்படி பெற்ற குழந்தைக்குத் தன்பால் ஊட்டி வளர்ப்பதேயாகும். அந்த அடிப்படையே தவறுமாயின் பின் எந்த வேறு அடிப்படையில் குழந்தை வளரும்? மேலும், பெற்ற குழந்தையைப் பார்த்துக்கொள்ள ‘ஆயா’வை அமர்த்திக் கொள்ளும் நாகரிகமும் இன்று நீ காணும் ஒன்றுதான். எனினும் அது குழந்தையை வளர்க்கும் நல்நெறியாகாது. ஆணும் பெண்ணும் அலுவலகங்களுக்குச் சென்று