பக்கம்:மக்கட் செல்வம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓம்புமதி!

17



அன்புடைச் செல்வி!

பார் அனைத்தையும் பொய்யெனத் துறந்த பட்டினத்து அடிகள் தன் அன்னையை மட்டும் மறக்கவில்லை. அவரைத் தெய்வமாகப் போற்றினார். அவர் இருக்கும் வரையில் அடிகள் ஊரைவிட்டு வெளியே செல்லவில்லை. அவர் இறந்த பிறகுதான் அந்தச் சேய் உள்ளம்-துறவு கொண்ட உள்ளம்-எப்படிக் கொதித்தது! பெற்றதாய் தன்னை எந்தெந்த வகையில் வளர்த்தாள் என்பதை எண்ணிப் பார்த்த அவ் உள்ளத்தின் நினைவுகள் உதட்டில் பாட்டாக உருப்பெற்று ஓடி வந்தன.

'ஐயிரண்டு திங்களாக அங்கமெலாம் நொந்துபெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்து-செய்யவொரு
கைப்புறத்தி லேந்திக் கனக முலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி'


'நொந்து சுமந்து பெற்று நோவாம லேந்திமுலை
தந்து
வளர்த்தெடுத்துத் தாழாமே-அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்'

'வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டி அணைத்தென்னைக் காதலித்து-முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ

விறகிலிட்டுத் தீமூட்டு வேன்'

என்று அவர் பாடும்போது நாம் நம்மை மறந்தே விடுவோம். ஆம்! பெற்றதாய், இந்த வகைகளிலெல்லாம் என்றென்றும் மக்கள் நினைக்கும் வண்ணம், குழந்தையை வளர்த்துத்தான் ஆகவேண்டும்.