பக்கம்:மக்கட் செல்வம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

குழவி கொள்பவரின்


கரு வயிற்றில் தங்கியிருந்த காலத்தில் குழந்தை பெறும் மாற்றத்தையெல்லாம் பிறகு ஒரு கடிதத்தில் விளக்கமாக எழுதுகிறேன். அந்தப் பத்து மாதங்களிலும் நீ உன் உடலில் உண்டான பல்வேறு மாற்றங்களை அறிந்து உற்ற நோய்களைப் பொறுத்துக்கொண்டு, கரு வளரத்தக்க வகையில் உணவும் மருந்தும் உண்டு உன் வாட்டம் எண்ணாது உருத்தெரியாக் கரு வளர அரும்பாடுபட்டாய். இனியும் அப்பாடு பெரிதாகும். ஆம்! அக் குழந்தைக்கு ஏதேனும் நோய் வந்தால் நீதான் மருந்து சாப்பிட வேண்டும். அக்குழந்தைக்கு ஒன்றும் தெரியவழியில்லை அல்லவா! நீ தான் இடைவிடாது அதன் பக்கத்தில் இருந்து ஈ, எறும்பு அதைத் தீண்டா வழியில் பாதுகாக்க வேண்டும். அதற்குப் பசி எடுக்கும் வேளை அறிந்து நீதான் பால் ஊட்டவேண்டும். ‘அம்மா பசிக்கிறது’ என்று அது வாய் திறந்து கேட்கச் சில ஆண்டுகள் கழிய வேண்டும். எனவே நீதான் அதன் பசியறிந்து, வேளை யறிந்து உணவு அளிக்க வேண்டும். இரவுக் காலத்தில் அது உறங்காது உனக்குத் தொல்லை கொடுக்கலாம். மகப்பேறுற்ற சோர்விலே உனக்கு உறக்கம் மிகுதியாக வரலாம். எனினும் நீ அந்த இரவு வேளைகளில் உன் உறக்கத்தைத் தியாகம் செய்யத்தான் வேண்டும். இரவு முழுதும் அது தூங்காது அழுமாயின் நீயும் விழித்துக் கொண்டுதான் இருக்கவேண்டும். இவ்வளவும் செய்ய எத்தனையோ பக்கத் துணைகள் உனக்கு இருக்கலாம். என்றாலும் நீயே அதைச் செய்தால்தான் உனக்கு மனநிறைவு ஏற்படும். இவ்வுண்மையை நீ இதற்குள் அறிந்திருப்பாய் என நம்புகின்றேன்.

குழந்தாய்!

ஆம்! இளி நீ உன் குழந்தையைக் கொஞ்சித் தாலாட்டப் போகிறாய். என்றாலும் நீ எனக்குக்