பக்கம்:மக்கட் செல்வம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓம்புமதி

19


குழந்தைதானே! அந்தத் குழந்தை உள்ளத்தால் மறந்தும் பெற்ற பிள்ளையைக் காக்கச் சோம்பல்படாதே. அதற்கு வரும் நோயைப்போக்க நீ மருந்து உண்டு, அதன் வாழ்வு மலர நீ தியாகம் செய்து, அது வளர உன் வளத்தைச் சுருக்கித்தான் ஆகவேண்டும். சுருங்கச்சொன்னால் இனி உன் வாழ்வு, அக்குழந்தையின் வளர்ப்பிலே–அதன் வளர்ச்சியிலே–அதன் வாழ்விலே அமைந்து விட்டது. இனி உன்னை அக்குழவியிடமிருந்து பிரிப்பார் யார் ?

அறிவுடைச் செல்வி!

இத்தனை உண்மைகளையும் அன்றுதொட்டு அறிவறிந்த மக்கள் உலகுக்கு உணர்த்திக்கொண்டேதான் வருகின்றனர். தமிழ் நாட்டிலே வாழ்ந்த புலவர்கள் இவ்வுண்மையைப் பலவகைகளில் உணர்த்துகிறார்கள். குழவியின்பம் பற்றிப் பாண்டியன் அறிவுடை நம்பி கூறிய பாட்டை முன் கடிதத்தில் கண்டாய். இதோ மற்றொரு அறிஞரை உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். அவர் குழந்தை வளர்க்கும் முறைகளையெல்லாம் நன்கு அறிந்தவராக வேண்டும். எனவே அதை உவமையாக வைத்து ஓர் அரசனுக்கு அறிவுறுத்த நினைக்கிறார், நாடாளுகின்ற ஓர் அரசன் தாய் போன்றவன்; நாடு குழவி போன்றது. நாடென ஈண்டு வெறும் மண்ணை மட்டும் நான் குறிக்கவில்லை. அதிலே வாழ்கின்ற மக்களையும் பிற உயிர்களையுமே நான் இங்கே குறிக்கின்றேன், தன் நாட்டில் வாழ்கின்ற மக்கள் வாழ்வே தன் வாழ்வாக எண்ணவேண்டியவன் அரசன். அவர்களுக்கு ஒருநோய் - அல்லல் - துன்பம் - அவல நிலை வந்தால் அதை நீக்கத் தான் மருந்துண்ணும் வகையில் முன்னின்று வழிகாண வேண்டும். எங்கோ உப்பரிகையில் வாழாது, தானே முன்வந்து. அவர்கள் குறையை