பக்கம்:மக்கட் செல்வம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓம்புமதி!

21


மக்களைப் பெற்றார் மேல் ஏற்றிக் காட்டுகின்றார். இதோ அவர் வாய்மொழியை நீயே படி.

‘எருமை அன்ன கருங்கல் இடைதோறு
ஆனிற் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும்!
நீயோர் ஆகலின் நின் ஒன்று மொழிவல்;
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொடு ஒன்றாது, காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி

அளிதோ தானே, அது பெறலருங் குறைத்தே’
(புறம் 5)

கடைசி அடிகளை நீ படித்து படித்து அதன் சிறப்பை நன்கு உணர்ந்துகொள். அதில்தான் அவர் குழந்தையை வளர்ப்பதில் உள்ள அருமை பெருமைகளை யெல்லாம் எப்படிச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருக்கிறார்!

அன்புள்ள,
அப்பா.