பக்கம்:மக்கட் செல்வம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

புதல்வர் தம்


மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு (குறள் 66)

எனக் கூறிப் பின்னும் அவர் அச் சொல்லின்பத்தை நன்கு விளக்கிக் காட்டுகின்றார். உலகில்- தமிழ் இசை உலகில் - சிறந்த இசைக் கருவிகள் குழலும் யாழுமே. யாழ் எத்தகையது என்பதை இன்று திட்டமாக அறிய' முடியாவிட்டாலும், பேரறிஞர் விபுலாநந்த அடிகளார் எழுதிய ‘யாழ் நூல்’வழி அதன் சிறப்பை அறியமுடியும். யாழ்போன்ற விணையை நீ நன்கு அறிவாய். குழல் ஒலியும் உனக்குப் பழக்கமானதே. வானொலிப் பெட்டி யைத் திறந்துவைத்துக் கொண்டு இக்குழல் ஒலியை நீ எத்தனை எத்தனை தடவை அனுபவித்திருக்கிறாய்: ஆம்! இனி அக்குழல் இசையும் யாழ் இசையும் உனக்கு இன்பம் தாரா! அனைத்தினுக்கும் மேலாக உன் குழந்தை யின் வாய்ச் சொல்லே உனக்கு இன்பம் தருவதாகும். இதைத் திருவள்ளுவனார்

குழல் இனிது யாழ்இனிது என்ப தம் மக்கள்
மழலைச்சொற் கேளா தவர் (குறள் 65)

என நன்கு காட்டுகின்றார். மற்றக் குழந்தைகளின் சொற்கள் ஒரு வேளை ஒருசிலருக்கு இன்பம் தராததாக இருக்கலாம், ஆனால் தம் குழந்தையின் மலைச்சொல் எப்படியிருப்பினும் பெற்றவருக்கு இன்பம் தராது போகுமா? எனவேதான் ‘தம் மக்கள்’ என்றே வலியுறுத்துகின்றார்.

அன்பின் அரசி,

குழந்தை மழலை மொழியில் அப்படி மகிழ என்ன இருக்கிறது எனச் சிலர் நினைப்பர். ‘பெற்றவர் அறிவர் பிள்ளையின் அருமை’ என்றதொரு பழமொழி நாட்டில் உண்டு. ஆம்! குழந்தைச் செல்வச் சிறப்பு அவர்களுக்குத்தான் நன்கு விளங்கும். தம் குழந்தைகள் பேசும் மொழியில் அவர்கள் - அப்பெற்றவர்கள் - என்ன தான்