பக்கம்:மக்கட் செல்வம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மழலை

25


காண்கின்றார்களோ? அச்சொற்கள் அவர்களுக்கு விளக்கும் பொருள் தான் என்னவோ? அதனால் அவர்கள் என்ன பெறுவார்களோ? தெரியாது, என்றாலும் அந்தச் சொல் அளிக்கும் இன்பத்தின் எல்லையை யாரே கணக்கிட்டு உரைக்கவல்லார்!

குழந்தையின் வாய்ச் சொல்லுக்குப் பொருள் கிடையாது, யாழ் போலும் குழல் போலும் இனிய நல் ஒலிகளை எழுப்பும் ஆற்றலும் அச்சொற்களுக்குக் கிடையாது. காலமறிந்தும் இடமறிந்தும் செய்வினையின் மூலமறிந்தும் குறிப்புணர்ந்தும் காட்டும் சொற்களாகவும் அவை இருக்கமாட்டா! அப்படியிருந்தும் அந்த மழலைச் சொல்லை, பெற்றவர்கள் கேட்டுத் தம்மை மறந்து மகிழ்கின்றார்கள் அன்றோ! அந்தக் குழந்தையின் வாய்ச் சொல்லுக்குப் பொருள் இல்லையாயினும், பெற்றதாய் பொருள் காட்டி ‘இதைத்தான் குழந்தை சொல்லுகிறது’ என்று மற்றவரிடம் கூறிப் பெருமை கொள்ளும் காட் சியை நீ கண்டிருக்கிறாய் அல்லவா ! அதே நிலையில் நீ உன் குழந்தையின் வாய்ச்சொல்லுக்குப் புதுப்புதுப் பொருள் காணும் கால எல்லையில் கால்வைத்திருக்கிறாய். அதன் ஒவ்வொரு சொல்லும் உன்னை வாழ்விக்க வல்லது; அருள் நிரம்பியது; அமிர்தம் போன்றது. இந்த உண்மைகளை யெல்லாம் உணர்ந்த ஒரு சங்கப் புலவர் அவற்றைத் தொகுத்துப் பாட்டாகத் தந்துள்ளார்.

ஔவையாரைப் பற்றி நீ நன்கு அறிவாய். முன் கடிதங்களில் குறித்த சங்கப்புலவர்கள் உனக்கு ஒரு வேளை புதியவராக இருக்கலாம், ஒளவையார் என்றதும் ‘ஆத்திசூடி அமர்ந்ததேவனை’ எனத் தொடங்குவாய் என்பது எனக்குத் தெரியும். அவர் பிள்ளைகள் உள்ளங் கொள்ளுமாறு ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை,

2