பக்கம்:மக்கட் செல்வம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

புதல்வர் தம் மழலை


‘சொன்ன கலையின் துறையனைத்தும் தோய்ந்தாலும்
என்ன பயனுடைத்தாம் இன்முகத்து—முன்னம்
குறுகுதலைக் கிண்கிணிக்கால் கோமக்கள் பால்வாய்ச்

சிறுகு தலைக் கேளாச் செவி’

என்பது அவர் பாட்டே!

இத்தகைய இனிய தீஞ்சொல் பற்றிய பலப்பல புலவர்கள் பலவாறு பாராட்டியுள்ளார்கள். அவைகளை யெல்லாம் ஈண்டு காட்டிக்கொண்டே செல்லன் பெருகும். அகரானூற்றில் சாகலாசனார் என்ற புலவர்,

‘நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத்
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்
மாசில் அங்கை மணிமருள் அவ்வாய்
நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்

யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை
(அகம் 16)

என இப்பிள்ளையின் மழலை மொழியைப் பாராட்டுகின்றார். இப்படிப் பாராட்டியவர் எத்தனையோ புலவர்கள், இன்று இந்த அளவோடு இக்கடிதத்தை முடிக்கிறேன். நாளை வேறு தொடர்ந்து எழுதுகிறேன்.

அன்புள்ள,
அப்பா.