பக்கம்:மக்கட் செல்வம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

மறத்துக்கும்


துணையாம், என்பார், ‘மறத்திற்கும் அஃதே துணை’ என்றார்” எனக் காட்டினார். எனவே அன்பு அறவழியில் செல்வோரை வாழவைப்பதோடு, மறவழியில் செல்வோரையும் திருத்தி வாழ வைக்கிறது என அறிகிறோம். அன்பின் செயல் அத்துணைப் பெருமை வாய்ந்தது. அரசி! குழந்தைச் செல்வமும் இக்குறளுக்கு ஒப்பவே சிறக்கின்றது. பெற்ற தாய் தந்தையர் தவறும் நிலையில் முன்னின்று அவர்களைத் திருத்தவும் செய்கிறது.

நலமார் செல்வி!

தமிழ்நாட்டுச் சிறந்த பண்பாடுகளுக்கிடையில் ஒரு கரிய புள்ளியும் எப்போதோ உண்டாகிவிட்டது. தொல்காப்பியனார் காலந் தொடங்கி நேற்று வரை அது வாழ்ந்தேதான் வந்தது. அதுதான் பரத்தையில் பிரிதல் என்னும் நிலை. மனைவியைக் கொண்ட தலைவன் இல்லறவாழ்வில் இயங்கும் போது தன் உரிமை மனைவியை விட்டுப் பரத்தையராம் பிறமகளிரை நாடி இன்பம் பெறுவானாம். இது எத்தகைய இழிதகைமை என எண்ணத் தோன்றுகின்றதல்லவா! என்றாலும் பல புலவர்கள் இந்த இழிவாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகின்றனர். அதைப்பற்றி நான் இங்கு விளக்கிக் கொண்டிருக்கத் தேவை இல்லை. அது நாட்டிற்கும் இந்த ஏட்டிற்கும் தேவை இல்லாத ஒன்று. இங்கு நான் உனக்குக் கூற விரும்பிய ஒன்று, அக்கொடிய நிலையிலிருந்து தன் தந்தையைத் திரும்பிக் கொணரும் குழந்தைச் செல் வத்தைப் பற்றித்தான்.

பரத்தைமனை செல்லும் தலைவன் தன் குழந்தையின் காரணமாக அச்செயல் விடுத்துத் தன் வீடு திரும்பும் காட்சியைப் பல புலவர்கள் பாராட்டுகின்றார்கள். ஓரிரு காட்சியை இங்கே உனக்குக் காட்டலாம் என நினைக்-