பக்கம்:மக்கட் செல்வம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஃதே துணை

31


கின்றேன். தலைவி தான் பெற்ற நற்குழவியை மடியில் வைத்துப் பாராட்டிப் போற்றுகின்றாள். அதே வேளையில் பரத்தை வீட்டுக்குப் பிரிந்துசென்ற தலைமகன் வெளியே வாயிற்புறத்து வந்திருக்கின்றன். உள்ளே வர அஞ்சினான் போலும். அவனது இழிசெயல் அவனை நாண வைக்கிறது. எனவே எண்ணுத எண்ணி எண்ணி ஏங்கி நிற்கின்றான் தலைவன். தலைவி தன்னை ஏற்பாள் கொல்லோ? என்ற வினா எழுகிறது. அதே வேளையில் குழந்தையோடு கொஞ்சும் தலைவியின் வாய் பேசுகிறது. குழந்தையைப் பாராட்டு முகத்தான்-அக்குழந்தையின் செவ்வியை விளக்கு முகத்தான்-அக்குழவியின் தளர் நடையையும், மழலை மொழியையும், பிற இயல்புகளையும் தான் கண் டும் கேட்டும் களிக்கின்ற முகத்தான்-அவற்றின் இன்ப நினைவுகளைக் கூறி, அதே வேளையில் தலைவன் அடாத செயலால் தன் உள்ளத்து அமையும் துன்பச் சாயலையும் காட்டுகின்றாள் தலைவி. தலைவனை நேரில் கண்டிக்க அவள், உள்ளம் தயங்கி இருக்கும். பெண்களுக்கு உள்ள நல் இயல்பு அதுதானே. எனவே, அவன் சிறைப்புறத் தாகைத் தான் தன் மதலையை முன்னிறுத்தி உள்ளத்தைத் திறந்து காட்டுகிறாள்.

அவள் தன் குழந்தையை நோக்கி அன்புச் செல்வமே ! உன் மழலை மொழி எனக்கு இன்பம் தருகிறது. உன் தளர் நடை காணும்போது நான் மகிழ்கின்றேன். உனக்கு அம்புலி காட்டி உள மகிழ்கின்றேன். ஆல்ை அதே வேளையில் உன் தந்தையின் அடாத செயலை நான் காணும்போதும் கேட்கும் போதும் நெஞ்சம் அஞ்சுகிறது. என்.செல்வமே ! இந்த உன் தந்தையின் கொடுஞ் செயலுக்கு விடிவு உண்டாகாதா?’ என்று பேசி அச்சொற் களைக் கணவனின் செவிப்படவைக்கிருள். இச்சொற் களைக் கேட்டபின்பும் தலைவன் திருந்தர் திருப்பானே? ஓடிவந்து மனைவியின் அடிபற்றி மன்னிப்புக் கேட்டுத்