பக்கம்:மக்கட் செல்வம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

மறத்துக்கும்



திருத்தி நலம் பெற்றிருப்பானல்லனோ! எனவே குழந்தை இவ்வாறு மறத்தை மாற்றும் நல்மருந்தாகவும், அமைகின்றது.

அரசி!

உனக்கு நான் மேலே காட்டிய கருத்துடைய பாட்டைக் கேட்கவேண்டும் என்ற விருப்பம் உள்ளதை நான் அறிவேன். ஆகவே அந்தக் கலித்தொகை அடிகளைக் கீழே தந்து விடுகிறேன். ஆம்! கலித்தொகை என்னும்போது சங்கச் செய்யுட்களின் சிறப்பெல்லாம் உனக்கு முன்னே தோன்றும். அத்தொகுதிகளுக்குள்ளே இக் கலித்தொகையே சிறந்தது எனக் கருதித்தானோ அதைக் 'கற்றறிந்தார் ஏத்தும் கலி' எனப் போற்றினர் புலவர். கலித்தொகையில் ஐந்திணைகளுக்கும் தனித் தனிப் பாடல்கள் உள்ளன. மருதக் கலியைப் பாடிய புலவர் இளநாகனார் என்பவர். அவர் தம் பாடல் சிறப்பின் இயல்புபற்றி அவர் 'மருதன் இளநாகனார்' எனவே அழைக்கப்பெற்றார். அவர் தம் பல பாடல்களுக்குள் இப்பிள்ளைமை இன்பத்தைப் பாராட்டுகின்றார். அவற்றுள் ஒன்றே இக்கருத்தமைந்த பாடல். இதோ அவர் வாக்கு, நீயே படித்து அறிந்துகொள்.

"கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லும்
தளர் நடை காண்டல் இனிது; மற்று, இன்னாதே
'உளம்' என்னா நுந்தைமாட்டு எவ்வம் உழப்பார்
வனை நெகிழ்ப்பு யாம் காணும்கால்"

"ஐய! காமரு நோக்கினை 'அத்தத்தா' என்னும் நின்
தேமொழி கேட்டல் இனிது; மற்று, இன்னாதே
உய்வு இன்றி நுந்தை நலன் உணச் சாஅய்ச் சாஅய்மார்

எவ்வநோய் யாம் காணும்கால்"