பக்கம்:மக்கட் செல்வம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஃதே துணை

33


“ஐய! ‘திங்கட் குழவி வருக’ என, யான் நின்னை
அம்புலி காட்டல் இனிது; மற்று, இன்னாதே
நல்காது நுந்தை புறம் மாறப்பட்டவர்
அல்குல்வரி யாம் காணும்கால்” (கலி 80)

என்பது அவர் பாடிய பாட்டு, இதில் தலைவன் செயலைப் பரத்தையர்மேல் ஏற்றிக்காட்டி அவனைத் திருத்திய சிறப்பு எண்ணத்தக்கது ஆகும். இதில் இளநாகனார் மற்றொரு சிறப்பையும் காட்ட நினைக்கின்றார். பெற்றவர்களுக்குப் பிள்ளைமை இன்பமே பெரிது அல்லவா! தன் இளம் குழந்தையின் மழலைச் சொல்லைக் கேட்டு மகிழ்வதிலும், பொன்மேனி கண்டு பூரிப்பு எய்துவதிலும், அக்குழந்தையை அணைந்து மகிழ்வு எய்துவதிலும் உள்ள இன்பம் பெரிது அல்லவா! ஆம்! அதை இப்போது நீ சிறிது சிறிதாகப் பெற்று வருகின்றாய் அல்லவா! இந்த இன்பத்தை பெறவேண்டிய தலைவன் உடன் இல்லையே. இங்குப் பாடலில் வருகின்ற தலைவன் உன் தலைவனைப் போன்று ஓதற்குப் பிரிந்தவன் அல்லன். ஓதற்பிரிவு அறி வறிந்த உலத்தாரால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று. ஆனால் இவன் உலகத்தோரால் வெறுக்கத்தக்க பரத்தைமை வாழ்வில் பிரிந்திருக்கிறான். அதனால் பிள்ளைச் செல்வத்தால் பெறும் பயன்களையெல்லாம் இழந்து விட்டான் என்ற உண்மையையும் இவ்வாசிரியர் சுட்டிக் காட்டுகின்றார்.

இந்த ஒரு பாடலால் மட்டுமன்றி, மருதன் இளநாகனார் இன்னும் பல பாடங்களாலே குழந்தை, பெற்றவர் மனமாறாட்டத்தைப் போக்கி அவர்களை ஒன்று சேர்க்கும் அருமருந்தாக அமைகின்ற தன்மையை எடுத்துக் காட்டுகின்றார். அவற்றுள் சிலவற்றை அவசியமிருப்பின் அடுத்து வரும் கடிதங்களில் விளக்கிக் காட்டுகின்றேன். ஆம்: குழந்தை அறச்செயலாக்குவதற்கும் மறச்செயல் மாற்றுவதற்கும் மருந்ததாக அமைவதை உணர்ந்துகொள்.