பக்கம்:மக்கட் செல்வம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

சிறுவர்ப் பயந்த



'கல்லா மழலைக் களியூறல் கலந்து கொஞ்சும்
சொல்லால் உருக்கி அழுது ஓடித் தொடர்ந்து பற்றி
மல்லார் புயத்தில் விளையாடும் மகிழ்ச்சி மைந்தர்

இல்லா தவர்க்கு மனைவாழ்வின் இனிமை என்னாம்?

என்று வினாவும் வகையிலே குழந்தைச் செல்வம் இல்லாதவர் வாழ்வு எதனாலும் சிறப்படையாது என்பதை ஆசிரியர் எடுத்துக் காட்டுகின்றார். இக்கருத்தையே காசி காண்டம் பாடிய புலவர்

'எத்திரு வுடையரேனும் இன்கனி மழலைச் செவ்வாய்

புத்திரர் இலாதோர் என்றும் பொறியிலர்'

என்று காட்டி விளக்குகின்றார். வளையாபதி என்னும் இலக்கியமேர் மக்கள் இல்லாச் செல்வத்தைப் பல்வேறு உவமைகளைக் காட்டி உலகுக்கு உணர்த்துகின்றது.

'பொறையிலா அறிவு; போகப் புணர்விலா இளமை; மேவத்
துறையிலா வனசவாவி; துகிலிலாக் கோலத் தூய்மை
நறையிலா மாலை; கல்வி நயமிலாப் புலமை; நன்னர்ச்

சிறையிலா நகரம்போலும் சேயிலாச் செல்வம்'

என்று உவமை வழிகளால் உணர்த்தும் நிலை எண்ணிப் பார்க்க வேண்டியதல்லவர்?

முன் ஒரு பாண்டிய மன்னன் பிள்ளைப் பேற்றைப் பற்றிப் பாராட்டிய சிறப்பை உனக்கு எடுத்துக் காட்டினேன். அதே மரபில் அவனுக்கு நெடுங்காலத்துக்குப் பின் வந்த பாண்டியன் அதிவீரராமன் தனது நைடத்திலே இப்பிள்ளைப் பேற்றின் சிறப்பைப் பற்றி நன்கு காட்டுகின்றார். உலகில் எவ்வகைப் பொருளையும் பெற்றுக் கொள்ளலாம். எனினும் மக்கட்பேறு என்னும் செல்வத்தை பெறுவது எளிதன்று எனக் காட்டுகின்றார் அவர். ஆம்! அரசபோக வாழ்வில் சிறந்து நின்ற அவருக்கு அச் செல்வங்களெல்லாம் செல்வமாகவே தெரியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாகப் பெறற்கரியது மக்கட் செல்-