பக்கம்:மக்கட் செல்வம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செம்மலோர்

47



வமே என்பதை அவர் உணர்ந்து உலகுக்கும் உணர்த்துகின்றார்.

'பெறுமவற்றுள் யாம் அறிவதில்லை அறிவறிந்த

மக்கட்பே றல்ல பிற'

என்ற வள்ளுவர் வாய்மொழியை நன்கு கற்றவரன்றே அவர். அவர் வாக்கை நீயே படி. இதோ அவர் பாட்டு.

'விரிகடல் அமிழ்தமும் வேலை ஞாலமும்
செருமுகத்து அழல் உமிழ் சிறுகண் யானையும்
எரிமணிக் குப்பையும் எளிதின் எய்தலாம்

அருமகப் பெறுதல் மற்ற அரிது என்பலே'.

இவ்வாறு எத்தனையோ புலவர்கள் குழந்தைச் செல்வத்தைப் பாராட்டி இருக்கிறார்கள். அண்மையில் வாழ்ந்த புலவர் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள் இப் பிள்ளைமை இன்பத்தைப் பற்றிப் பாடிய பாடல்களை நீ படித்திருக்கிறாய் அல்லவா! பள்ளியில் படிக்கும்போது பலமுறை அப்பாடலைச் சந்தத்தோடு. படித்துப் படித்து எனக்குக் காட்டியது இன்னும் நினைவு இருக்கிறது. எனவே இங்கு அவரது பாடல்களையும் எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கத் தேவை இல்லை என நினைக்கிறேன். கவிஞர் பாரதிதாசனுடைய குழந்தை இன்பத்தைப் பற்றிய பாடல்களையும் தாலாட்டுப் பாடல்களையும் நீ, அறிவாய் அல்லவா?

இத்தகைய பிள்ளைச் செல்வத்தை பெற்ற நீ பலவகையில் பிற நலன்களையெல்லாம் செறியப் பெற்றிருக்கிறாய் என்பதை உணர்ந்து கொள். உணர்ந்து கலிதீர்க்க வந்த அந்தக் கண்ணனையே தெய்வக் குழந்தையைப் போற்றி வளர்த்து சிறக்கவைத்து நீயும் சிறக்க வேண்டும் என்பதே என் ஆசை.

அன்பின் அரசி! இத்தகைய செல்வத்தைப் பற்றி உலகம் உண்டான நாள் தொட்டு எத்தனையோ அறிஞர்கள் சொல்லிக்