பக்கம்:மக்கட் செல்வம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7.

தம்பொருள் என்ப தம் மக்கள்


அன்புடை அரசி!

வள்ளுவப் பெருந்தகை நன்மக்கட்பேறு பெறுவதை குறித்து எழுதிய குறட்பாக்களை முந்திய கடிதங்களில் அங்கொன்று ஈங்கொன்றாகக் குறித்துள்ளேன். என்றாலும் அவர் மக்கட்பேறுபற்றிக் கூறிய பத்துப்பாடல்களையும் ஒரே சேரப் படித்தால் பல நல்ல கருத்துக்கள் தோன்றுமெனக் கருதியே இக்கடிதத்தில் அக்குறட்பாக்களைப் பற்றி எழுத நினைத்தேன். வள்ளுவர் இல்லற வாழ்வே பிறவற்றைக் காட்டிலும் ஏற்றம் பெற்றது என நன்கு தெளியக் காட்டினார்; பிறகு அவ்வில்லறத்துக்கு இன்றியமையாத வாழ்க்கைத்துணை நலத்தின் சிறப்பினை எடுத்து விளக்கி இறுதியில், அவ்வதிகாரத்திலேயே அவ்வாழ்க்கைத் துணையாகிய மனைவி இல்லறத்துக்கு மங்கலமானால், அதன் நன்கலன் 'நன்மக்கட்பேறு' என்றே கூறி அடுத்த மக்கட்பேறு என்ற அதிகாரத்தைத் தொடங்குகின்றார்.