பக்கம்:மக்கட் செல்வம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

தம்பொருள் என்ப



அன்பின் செல்வி!

மக்கட்பேறு என்ற அதிகாரத்துக்கு உரை எழுத வந்த பரிமேலழகர் பெருந்தவறு ஒன்றினைச் செய்துவிட்டார். அது அவர் பிழையன்று; காலத்தின் கோளாறு. அவர் வாழ்ந்த காலமும் அவரது சூழலும் அத்தகையன. சங்க காலத்தில் பெண்களை ஆண்கள் சமமாகக் கருதிப் பேணிப் போற்றிவந்தனர் என்பதை நீ அறிவாய். எனினும் இடைக்காலத்தில் பல்வேறு மாறுபட்ட பண்பாடுகளும் நாகரிகங்களும் நம் நாட்டில் புகுந்த காரணத்தால் தமிழர் பெண்களைத் தாழ்வாக மதிக்கத் தொடங்கி விட்டனர். பெண்களுக்கு இயல்பாக அறியும் அறிவு இல்லை என்றும், ஒருவன் பெண்ணைப் பெற்றெடுப்பதிலும் பிள்ளையைப் பெறுவதே மேல் என்றும் தப்புக் கணக்குப் போடத் தொடங்கிவிட்டனர். அச்சூழலில் பட்ட பரிமேலழகரும் 'மக்கட்பேறு' என்ற அதிகாரத்தின் தலைப்பையே 'புதல்வரைப் பெறுதல்' என மாற்று விட்டார். வள்ளுவரோ முந்திய அதிகாரத்திலேயே கடைசிக் குறளில் அதற்கு 'மக்கட்பேறு' என்ற தோற்றுவாய் தந்ததோடு இந்த அதிகாரத்திலேயும் ஏழு பாக்களில் 'மக்கள்' என்ற சொல்லையே பெய்திருக்கின்றார். இதை அறிந்தும் பரிமேலழகர் காலச் சூழலுள் சிக்கித் தம் மனவழி அதற்குப் 'புதல்வரைப் பெறுதல்' என்ற தலைப்பினை இட்டார். தம் கருத்துக்கு ஏற்ப, பெண்களுக்கு இயலபாக அறிவும் அறிவு இல்லை எனவும் துணிந்து கூறிவிட்டார்.

'ஈன்ற பொழுதில் பெரிது உவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்'

என்ற குறளுக்கு உரை எழுதவந்த அவர், 'கேட்ட தாய்' என்பதற்கு உரிய விளக்கம் தர நினைந்தார். நினைந்து "பெண்ணியல்பால் தானாக அறியாமையின் கேட்ட தாய் எனவுங் கூறினார்" என விளக்கம் தந்துள்ளார். இது எத்-