பக்கம்:மக்கட் செல்வம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தம்மக்கள்

57



வரும், என்பா? பரிமேலழகர். எனவே அம்மக்கள் ஆற்றும் செயல்வழி நல்வினை பெற்றவரை அடையும் என்பது கருத்து. பரிதியாரோ 'அந்தப் புதல்வர் என்னும் பேறு தாந்தாம் செய்தவிதி வசத்தால் வரும்' என்பார். எப்படியாயினும் மக்களைப் பெறுவது பெரும்பேறு என்பதும், அதையே உலகோர் தம்பொருள் எனக் கொள்வர் என்பதும் நன்கு தெரிகின்றதே. இக்குழந்தைச் செல்வம் இம்மையில் மட்டுமன்றி மறுமையிலும் நல்கதி உய்க்கும் என்ற உண்மையைக் கம்பர், 'சேய் ஒக்கும் முன்னின்று ஒரு செல்கதி உய்க்கு நீரால்' என்று மன்னன்மேல் சார்த்திப் புகழ்வது அறிந்து மகிழத்தக்க ஒன்றாகும். இதுபற்றி இம்மட்டோடு நிறித்தி கொள்ளலாம் என எண்ணுகின்றேன்

அறிவுடை செல்வி!

திருவள்ளுவர் அடுத்த மூன்று குறட்பாக்களிலும் மக்கள் கைப்பட்ட கூழின் இனிமையையும், அவர்மெய் தீண்ட வரும் இன்பத்தையும், அவர் சொற்கேட்டு அடையும் இன்பத்தையும் தனித்தனியாகக் காட்டுகிறார். உன் பிள்ளைக் கனியமுதை வாரி அணைக்கும்போது நீ பெறும் இன்பத்தை இங்கே என்னால் ஏட்டில் எழுத முடியுமா? அதுபோன்றே அக்குழந்தை எழுப்பும் இன்னொலி-பொருளற்ற ஓசை-எத்தனை இன்பமாகச் செவிக்குள் நுழைகின்றது. அதையும் நீ துய்த்திருக்கிறாய். இன்னும் குழந்தை கையிட்ட அந்தசோறும் இனிமை தருமன்றோ! அதையும் நீ சின்னாளில் பெறுவாய். இவ்வாறு எந்த நிலையிலும் இன்பம் தரும் மக்கள் செல்வம் சிறந்த ஒன்றல்லவ! அவர் குறளையே நீ படிக்கவேண்டாமா? நீ அவற்றை முன்னமேயே அறிவாயே! ஆம், என்றாலும் இதோ அவற்றையும் தந்து விடுகிறேன்.

4