பக்கம்:மக்கட் செல்வம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தம்மக்கள்

59



போன்று எத்தனை எத்தனையோ புலவர்கள் இப்பிள்ளைமை இன்பத்தைப் பாராட்டி இருக்கிறார்கள். இந்த காற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த பாரதியார் இந்தக் குறட்பாக்களின் கருத்தையெல்லாம் உள்ளத் தமைத்து அழகாகப் பிள்ளைத்தன்மை பற்றிய பாடல்கள் பாடியுள்ளார். அவைபற்றியெல்லாம் உனக்குப் பிறகு எழுதுகிறேன், எனினும் இக்குறட்பாக்கள் கருத்தடங்கிய ஒன்றைமட்டும் இங்குக் கூற வேண்டும் என்று நினைக்கிறேன். குழந்தையின் மெய்தொட்டுப் பெறும் இன்பத்தை

'கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி
உன்னைத் தழுவிடிலோ-கண்ணம்மா

உன்மத்த மாகுதடி'

என்று குழந்தையைத் தழுவிய நிலையில் தன்னை மறந்த பெருமையைப் பாராட்டி மகிழ்கின்றார். நீயும் அந்த இன்பத்தை பெற்றுச் சிறக்கின்ற நேரத்தில் நீண்ட கடிதம் எழுதி உன் சிந்தையைத் திருப்ப விரும்பவில்லை. இந்த அளவோடு இக்கடிதத்தை நிறுத்திக்கொள்ளுகிறேன்.

அன்புள்ள,
அப்பா.