பக்கம்:மக்கட் செல்வம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தையும் தெய்வமும்

61


துக் காண்பதிலும் காட்டுவதிலும் ஓர் உண்மை இல்லை என்று சொல்ல முடியுமா? குழந்தையையும் தெய்வத்தையும் எத்தனையோ வகையில் ஒற்றுமைப்படுத்திக் காட்டலாம். ஒன்றை இங்கு முக்கியமானதாகக் காட்டுகின்றேன்.

கடவுளைப் பற்றிப் பாடவந்த அடியவர்கள் அவன் உலகில் எல்லா வேறுபாடுகளையும் கடந்து அனைவரிடத்தும் அழகுற அமைந்துநிற்பான் எனக் கூறுவார்கள். அவன் சாதி சமய வேறுபாடுகளைக் கடந்தவன்; மனதில் மாசு அற்றவன்; உள்ளொன்றும் புறமொன்றும் கண்டறியாதவன். எந்த வகையில் அவனை அழைத்தாலும் அவ்வழைப்பு அன்புவழி வந்ததாயின் மகிழ்ந்து அவரை அணுகுவன். அவனுக்கு எந்த வேறுபாட்டுணர்வும் கிடையாது. குழந்தைகளும் அத்தகையனவல்லவோ? அவைகளுக்கு இன்னர் இனியர் என்ற வேறுபாடு கிடையாதே. அவர்கள் உள்ளம் மாசுமருவற்று விளங்கும் ஒன்றல்லவா? வளர்ந்த மனிதனுகக் கூறிக்கொண்டு பண்பாட்டில் வளராத நம்போன்றவர் உள்ளத்தில் இருக்கும் பொய்யும் பொருமையும் கொடுமைகளும் குழந்தைகளிடம் காண முடியுமா? வஞ்சகம் இன்ன என்பதை அறியாத செல்வங்களல்லவா குழந்தைகள் ? அவைகளுக்கு உள்ளும் புறமும் ஒன்ருக இருக்குமல்லவா! உள்ளத்தில் குறையையும் உதட்டில் புன்சிரிப்பையும் கொள்ளும் நாகரிகம் அக்குழந்தைகளுக்குத் தெரியுமா ? மனதில் வஞ்சகத்தோடு வந்து வாரி அணைப்பராயின் அவரிடமும் கொஞ்சிக் குலவும் பண்பு குழந்தைகளுடையது அல்லவா ? அன்பால் யார் அழைத்தாலும் யாதொரு வேறுபாடும் இல்லாமல் பற்றிக் கொள்ளும் பண்பு குழந்தையிடம் இருப்பதை அறியாதவர் யாரே? சில குழந்தகைள் வளர வளரப் புது முகங்களைக் கண்டால் அழுவதைக் காண்கிறோம். அது வளர்ப்ப