பக்கம்:மக்கட் செல்வம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

குழந்தையும்


தால்வரும் குற்றம் என்று கூறுவேன். பெற்றோர்கள் வருபவர்கள் யாவராயினும் உளத்தால் அவர்களிடம் வேறு பாடு காணாது பழகுவார்களேயானால், அவர் தம் குழந்தைகளும் வருபவர்களோடு வேறுபாடு காணாமலே பழகுவதைக் காணலாம், தாம் பாலூட்டி வளர்த்தால் தம் அழகு பாழ்படும் என எண்ணிக் கொள்ளும் தாயரைக் காட்டிலும் வளர்ப்புத் தாயரிடமே அதிகமாகப் பற்றுக் கொள்ளும் குழந்தைகளைக் காண்கிறோமல்லமோ? இதுவும் ஆண்டவன் பற்று முறை போன்றதேயாகும். ஏதோ வழிபடும் பரம்பரையில் பிறந்தோம் என்பதற்காக ஆர வாரமாகப் பூசை செய்து உள்ளத்தில் வஞ்சம் எண்ணும் மாக்களை விட்டு, ஆண்டவன், அயலவனாயினும் உளத்தால் அன்பு செய்வானாயின் அவனைத்தான் அஞ்சல் என அணைப்பன் எனப் பல அடியவர் காட்டியுள்ளனர். எனவே குழந்தையையும் தெய்வத்தையும் பின்னிப் பிணைக்கப் பாராட்டுவது எவ்வளவு சிறந்தது எனத் தெரிகிறது அல்லவா?

நலம்பெறு நற் செல்வி!

இயேசு பெருமானைப் பற்றி நீ உன் கல்லூரிநாளில் படித்திருக்கிறாயல்லவா? அவர் குழந்தைகளைப் பற்றிக் கூறியது உனக்கு நினைவில் இருக்கும் என நினைக்கிறேன். ‘குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்; இறைவனுடைய அருளாட்சி அவர்களுடையதே’ என அவர் கூறிய தன் கருத்தென்ன? இறைவன் குழந்தைகள் உள்ளத்தே அன்பால்-அருளால்-ஆட்சி செய்கின்றான் என்பதன்றோ பொருள். வளர்ந்த நம்மைக் காட்டிலும் அவர்கள் ஆண்டவன் அருகில் இருக்கிறார்கள் என்ற உண்மையைத் தானே இயேசு பெருமான் அவ்வளவு அழகாகக் காட்டுகின்றார்.

மற்றும் நம் நாட்டில் தெய்வநெறி காட்டியவர்களெல்லாம் குழந்தைகளாக இருப்பதைக் காண்கிறோமல்-