பக்கம்:மக்கட் செல்வம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தெய்வமும்

63


லமோ! சைவநெறி தழைத்தோங்க ஏழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் ஊர்தோறும் தந்தையின் தோள் மேலமர்ந்தும், முத்துப் பல்லக்கு ஏறியும் சென்று சென்று, செம்மை நலம் புரிந்த செல்வர் ஞானசம்பந்தர் இளம் குழந்தையல்லவா? பிற்காலத்தில் சைவ சித்தாந்த சாத்திரவழி முப்பொருன் உண்மையை உலகுக்கு உணர்த்திய, வெண்காட்டு இறையருளாலே தோன்றி வளர்ந்த வெண்ணெய் நல்லூரின் வள்ளல் மெய்கண்டாரும் குழந்தைதானே!

காழிக் குழந்தைக்கு உமையே வந்து பாலூட்டினாள் என்று பாடுகிறது பெரிய புராணம். குழந்தையின் அழுகை ஒலி கேட்டு ‘அஞ்ச’லென ஓடிவந்து அருள் புரியும் தெய்வ வலத்தையே இயேசு அவ்வாறு கூறினார். இந்த ஞானசம்பந்தக் குழந்தைக்கு உமையே வந்து பாலூட்டிய பெருமையை அருள் ஞானம் கைவரப் பெற்ற சிவஞான முனிவர் தாம் எத்தனை அழகாகக் காட்டுகின்றார். பாட்டு இங்கு உனக்கு அத்துணை பெரும் பயன் தராது என்றாலும் அதன் இனிமை கருதியும் கடவுள் குழந்தைகளிடத்தே எவ்வளவு கருணை பூத்து அருள் செய்கின்றார் என்பதைக் காட்ட விரும்பியும் அச் சிவஞான முனிவர் வாக்கை அப்படியே தருகிறேன்.

தெய்வச் சுருதி தமிழ்க்கன்றித்
       தீட்டா நிலைமைத் தென உலகில்
தெரிக்கும் காழித் திருஞான
       செம்மற் குழவிக்கு அருள்ஞானம்
பெய்து குழைக்கவோ முலையாம்
       பெரிய மலைவாய் உறுத்துமென்றோ
பெருமான் தனையும் குழைத்தவலிப்
       பெற்றி அறிந்து தடுத்தோபூங்
கையில் இலகும் நகக்குறிபற்

       கதுவ நோமென்றோ தீம்பால்