பக்கம்:மக்கட் செல்வம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

குழந்தையும்


கறந்து கொடுத்தாய் எனச்சசிமார்
      கனிந்து பாட நகைமுகிழ்க்கும்
வைவைத் தமைத்த மதர்வேற்கண்
      வாழ்வே வருக! வருக!
வனங்கூர் களந்தைப் பதிஅமுத
       வல்லி வருக வருகவே!
(அமுதாம்பிகைப் பிள்ளைத்தமிழ்

— வருகைப் பருவம்)
அன்புடை அரசி!

இவ்வாறு குழந்தையைத் தெய்வமாகக் கொண்டாடுவதன்றித் தெய்வத்தையே குழந்தையாகக் கொண்டாடும் மரபும் தமிழ் நாட்டுக்குப் புதியதன்று. கடவுளரைப் பிள்ளையாகப் போற்றிப் பிள்ளைத் தமிழ் பாடி வழிபடும் வழக்கம் தமிழ் நாட்டில் இடைக்காலத்தில் சிறந்திருந்தது. அதுபற்றி உனக்குத் தனியாக ஒரு கடிதத்தில் எழுதுகிறேன். இங்கே அடியவர்கள் தம் அருட்பாடல்களிலே தெய்வத்தைப் பிள்ளையாகப் பாராட்டிய வகையில் இரண்டொன்று காட்டினால் போதும் என்று தினைக்கிறேன்.

அருணகிரிநாதர் முருகனாகிய குழந்தையை நினைந்து நினைந்து, நைந்து நைந்து உருகிப் பாடுபவர். ஆம்! முருகனும் கண்ணனும் குழந்தைகளாகப் போற்றப்படுகின்றவர் தாமே! குழந்தை முருகனைப் பலவகையில் பாராட்டும் அருணகிரியார் அடிக்கடி அக்குழந்தைக்கு அதன் மாமன் இராமனை அறிமுகப்படுத்துவார். ‘பல்வேறு சிறப்புக்கள் பெற்ற கண்ணனை-இராமனை மாமனாகப் பெற்ற மன்னா!’ என முன்னிறுத்தி முருகனைப் போற்றி வழிபடுவார் அவர். அவ்வாறு திருமாலைப் போற்றும்போது அத்திருமாலையும் குழந்தையாகவே காண விரும்பிற்று அவர் உள்ளம். உடனே தான்