பக்கம்:மக்கட் செல்வம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

குழந்தையும்


‘மன்னுபுகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே!
தென் இலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்
கன்னி நன்மா மதில் புடைசூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ’

(719)

இவ்வாறே பிற பாடல்களும் அழகின்-அன்பின்-ஆர்வத்தின்-உறைவிடமாய் உள்ளதை நீ பிரபந்தத்தின் வழியே படித்து அறிந்து கொள். அனைத்தையும் எழுதின் கடிதம் நீளும்.

இக் குலசேகரர் இவ்வாறே கண்ணனையும் குழந்தையாக்கித் தாலாட்டும் பாடல் இனிமை தருவதாகும். இதைப் பாடும்போது ஆழ்வார் தேவகியாகிவிடுகிறார். தேவகி கண்ணனைப் பெற்றுத் தன் உடன்பிறந்தவன் கொடுமைக்கு அஞ்சி நந்தன் மனையில் யசோதையிடம் அக்குழந்தையைச் சேர்ப்பித்த கதை உனக்குத் தெரிந்த ஒன்றே! ஏன்? உலகமே அறிந்த கதை அல்லவா அது. எனவே அக் கண்ணனை வளர்க்கும் பேற்றினை இழந்தவள் தேவகி. அவன் வளர்ச்சியைக் கண்டு மகிழும் பேற்றினைத் துறந்தவர் வாசுதேவர். இவற்றையெல்லாம் எண்ணி எண்ணிக் குலசேகரர் தானே தேவகியாகி இத்தேவகிப் புலம்பலைப் பாடுகிறார். இதிலும் எல்லாப் பாடல்களையும் காட்டாது மேலே கண்ட கருத்துக்கள் அமைந்த இரு. பாடல்களை மட்டும் காட்டி அமைகின்றேன்.

ஆலைநீர் கரும்பன்னவன் தாலோ
       அம்புயத்தடம் கண்ணினன் தாலோ
வேலைநீர் நிறத்தவன் தாலோ
       வேழப்போதக மன்னவன் தாலோ
ஏலவார் குழல் என் மகன் தாலோ
       என்றென் றுன்னைஎன் வாயிடை நிறையத்
தாலொலித்திடும் திருவினை யில்லாத்

       தாய ரிற்கடை யாயின தாயே (708)

என்றும்