பக்கம்:மக்கட் செல்வம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தெய்வமும்

67


முந்தை நன்முறை அன்புடை மகளிர்

முறைமுறை தத்தம் குறங்கிடை யிருத்தி எந்தையே என்றன் குலப்பெருஞ் சுடரே ::எழுமுகில் கணத் தெழில்கவர் ஏறே உங்தை யாவன் என்றுரைப்ப நின்செங்கேழ்
விரலினும் கடைக் கண்ணினும் காட்ட நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா
நங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே'
(710)

என்றும் அவர் பாடிய பாடல்கள் நெஞ்சை அள்ளுவன அல்லவா ! இவைபோன்றே பல்வேறு பிள்ளேமை விளை யாடல்களைப்பிற பாடல்களிலும் காட்டிக் கொண்டே செல்கின்றார் ஆழ்வார். அவற்றையெல்லாம், வாய்ப் பிருக்குமேல் வரும் கடிதங்களில் காட்டுகிறேன். இவ்வாறு கடவுளரைக் குழந்தையாகவும், குழந் தையைத் தெய்வமாகவும் கண்டு போற்றும் வழக்கம் தமிழ் நாட்டுப் பழம் பெரு வழக்கம். நான் முன் காட்டிய படி குழந்தையும் தெய்வமும் பல வகையில் ஒன்றுபட்ட பண்பிலே சிறப்பன. அந்தகைய குழந்தை நலம் பெற்ற நீ அதைச் சிறக்கப் புரந்து செழிக்க என வாழ்த்தி இக்கடிதத்தை முடித்துக் கொள்ளுகின்றேன்.

அன்புள்ள,

அப்பா.