பக்கம்:மக்கட் செல்வம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

பாலுண்ணும்


அன்பின் செல்வி

பிள்ளை பிறக்கவில்லையே என்று வருந்துவார் ஒரு புறம் இருக்கப் பிள்ளையைப் பெற்றவர்கள் அவதிப்படுவதும் உண்டே ! சினிமாவிலும் கூட ‘ஏன் பிறந்தாய்?’ என்று தன் வயிற்றில் பிறந்த குழந்தையைக் கண்டு கேள்விகேட்கும் படங்கள் நாட்டில் நடமாடுகின்றனவே. காக்கமுடியாது கவலையுறும் பெற்றோர் நிலை அது. நான் இங்கே விளக்கவந்தது அதுவன்று. காக்க வசதியும் வாய்ப்பும் உள்ளவர்களே தங்கள் குழந்தைகளை நன்றாகக் காப்பதில்லை என்பதுதான் நான் சொல்லவந்தது. சில செல்வர் வீட்டுப் பெண்கள் தங்கள் அழகு கெட்டு விடும் என்ற காரணத்தால் குழந்தைகளுக்குப் பால் தருவதையே விட்டுவிடுகிறார்கள். சில குழந்தைகள் பிறக்கும்போது புட்டிப்பாலும் கையுமாகவே பிறக்கின்றன—பாவம்! அவை இரக்கத்துக்கு உரியனவே! அதற்கேற்றாற் போன்று பல வியாபாரிகள் எத்தனையோ வகையான பால் புட்டிகளையும் பாற்பொடிகளையும் உண்டாக்கி விற்பனைக்கு அழகிய குழந்தை உருவோடு விற்க அனுப்பிவிடுகிறார்கள். பெற்ற தாயார் அவற்றை எவ்வளவு அதிக விலையானாலும் போட்டியிட்டு வாங்கித் தத்தம் குழந்தைகளை உண்பிக்கின்றனர். தாய்மை, உள்ளத்து அரும்ப வேண்டும் என்று உலகுக்கு உபதேசம் செய்யும் சில பெண்கள் கூடத் தங்கள் உள்ளத்து அத்தாய்மை அன்பைத் துடைத்துவிடுகிறார். ஆம், இந்த நூற்றாண்டின் நாகரிகமே அதுதான், நாள்தோறும் மேடை ஏறிப் பேசியும், பக்கம் பக்கமாகப்பல பத்திரிகைகளிலும் நூல்களிலும் எழுதியும் மற்றவர்களுக்கு வழி காட்டிகளாக உள்ளவர்கள் தங்கள் வழியைத் தனிப்போக்கிலே அமைத்துக் கொள்வது தானே இருபதத்தாம் நூற்றாண்டின் இடைப்பட்ட நாகரிகம். ஊருக்கெல்லாம் ஒளிவீசும் அந்தவிளக்கு தன் தண்டின்