பக்கம்:மக்கட் செல்வம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

பாலுண்ணும்


குழகனே என்றன் கோமளப் பிள்ளாய்
      கோவிந்தா என் குடங்கையில் மன்னி
ஒழுகு பேரெழில் இளஞ்சிறு தளிர்போல்
      ஒருகையால் ஒருமுலை முகம் நெருடா
மழலை மென்னகை இடையிடை அருளா
      வாயிலே முலை இருக்க என் முகத்தே
எழிகொள் நின் திருக்கண் இணைநோக்கம்
      தன்னையும் இழந்தேன் இழந்தேனே

(தேவகி புலம்பல் 7 )

இதில் அவளுடைய உள்ளத்தைத்தான் குலசேகரர் எத்தனை அழகாகப்படம் பிடித்துக்காட்டுகின்றார். அந்தப் பாலூட்டும் இன்பத்தை இழந்த அவள் நிலையில் தன்னை வைத்துப்பாடும் அவர் பரிசு பாராட்டுதற்குரியதன்றோ!

பெற்ற குழந்தையைத் தன் கையிடைவைத்துப் பாலுட்டுதல் தாயர்மரபு. அப்படிக் கையிடை அடங்கும் குழந்தையின் பாலுண்ணும் தோற்றம் எத்தகையது. ஒரு தனடத்தில் தன் வாயை வைத்துப் பால் உண்ணும் குழந்தை அப்படியே அரசவற்று இருக்காது. பொதுவாகவே குழந்தையின் உடல் உறுப்புகள் அனைத்தும் ஓயாமல் தொழிற்பட்டுக் கொண்டேதான் இருக்கும். பால் உண்ணும் குழந்தை இன்னும் மகிழ்ச்சியில் திளைத்து ஆடுமல்லவா! ஆம்! அந்த ஆட்டத்தால் பெறும் இன்பத்தை நீ இதற்குள் பெற்றிருப்பாய் என நினைக்கிறேன். அவ்வின்பம் பெரிது. அதையே குலசேகரர் பாட்டாக வடித்துத் தந்துள்ளார்.

ஒரு தனத்தடத்தில் வாய்வைத்துப் பாலைச் சுவைக்கும் அப் பசுக் குழவி, மற்றொரு கையால் மற்றொரு தன முகட்டைத் தொட்டு நெடுகின்றது. அதற்கு இடையில் சிரிக்கிறது. தாயின் முகத்தை நோக்குகிறது. அந்த நிலை யில் அதன் நோக்கு, தனது முகத்தோடு பொருந்தும் இன்பத்தையே குலசேகரர் இறுதியில் வைத்துப்