பக்கம்:மக்கட் செல்வம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

பிள்ளைத்


உன் குழந்தை ஏதேதோ மழலை மொழி பேசுகின்றது எனக் கடிதத்தில் எழுதி இருந்தாய் அல்லவா! அதன் பொருள் உனக்கு மட்டுமன்று, யாருக்குமே தெரிவதில்லை. மேலை நாட்டு அறிஞர் பலர் குழந்தையின் வளர்ச்சியில் காணும் மாறுபாடுகளையும், உள்ள வளர்ச்சிகளையும், பிறவற்றையும் ஆராய்ந்து பார்க்கிறார்கள். என்றாலும் அதில் உள்ள நயமும் இனிமையையும் வேறு எதிலும் இல்லையல்லவா! இதனால் தானே திருவள்ளுவர்.

‘குழல் இனிது யாழ் இனிது என்ப தம்மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்’

எனக் காட்டியுள்ளார். ஆம்! குழந்தைகள் எப்படி எப்படிப் பேசுகின்றன என்பதை வேண்டுமானாலும் படம் எடுத்தும் ஒலிப்பதிவு செய்தும் காட்டிவிடலாம், ஆனால் அவை ஏன் அப்படிப் பேசுகின்றன? செய்கின்றன? என்பதை யாராலும் எடுத்துக் காட்ட முடியுமா? குழந் தையின் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் யாரால் விளக்கம் தரமுடியும்?

இங்கே எனக்கு ஒன்று நிளைவு வருகின்றது. விஞ்ஞான உலகிலேயே சிறந்தவர் என்று இன்று போற்றப் படுகின்றவர் ஐன்ஸ்டீன் என்பவர். இதை நீ அறிவாய் அல்லவா. அவர் அண்டகோள நிகழ்ச்சிகளை-வானவெளி நிகழ்ச்சிகளை -ஆராய்ந்து முடிவில் இப்படித்தான் கூறியுள்ளார். ‘இந்த இயற்கை நிகழ்ச்சிகளெல்லாம் எப்படி எப்படி - எவ்வெவ்வாறு - நிகழ்கின்றன என்றெல்லாம் என்னால் கூறிவிட முடிகின்றது. ஆனால் ஏன் நிகழ்கின்றன என்று கேட்டு விடாதீர்கள். அவை யாராலும் கூற முடியாதன’ என்கிறார். ஆம்! இதே கூற்றுத்தான் குழந்தைகள் நிகழ்ச்சியிலும் நாம் காண முடியும். ஆம்! அதன் மழலை மொழிக்குப் பொருள் கூற முடியாதது. மாத்திரமன்று ; ஏன் அவ்வாறு பேசுகிறது என்பது பற்றியும் நம்மால் ஒன்றும் சொல்ல இயலாது.