பக்கம்:மக்கட் செல்வம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்

79


‘உண்ணிலா உவகை பெருங்களி துளும்பநின்று
      உன் திருத் தாதை நின்னை
ஒருமூறை கரம்பொத்தி வருகென அழைத்திடுமுன்
      ஒடித் தவழ்ந்து சென்று
தண்ணுலாம் மழலைப் பசுங்கு தலை அமுதினிய
      தாய்வயிறு குளிர ஊட்டி
தடமார்பு நிறைகுங் குமச்சே றளைந்து பொன்
      தாள்தோய் தடக்கை பற்றிப்
பண்ணுலாம் வடி தமிழ்ப் பைந்தாமம் விரியும்
      பணைத்தோள் எருத்தம் ஏறிப்
பாசொளிய மரகதத் திருமேனி பச்சைப்
      பசுங்கதிர்த் ததும்ப மணிவாய்
தெண்ணிலா விரியநின் றாடும் பசுந்தோகை
      செங்கீரை ஆடி அருளே
தென்னற்கும் அம்பொன்மலை மன்னற்கும் ஒருசெல்வி

      செங்கீரை ஆடி அருளே’

என்று குமரகுமாரர் மீனாட்சி அம்மையின் வாயுறு மழலை மொழிக்கு ஏங்கி நிற்கும் நிலை எண்ணி எண்ணிப் போற்றத்தக்கது அல்லவா!

இது போன்றே பின் பெயர்ந்து தளர் நடையிடும் குழந்தையை வருக என அழைக்கும் பாடல்களும், முத்தம் தருமாறு வேண்டும் பாடல்களும், பின் சந்திரனைக் குழந்தையோடு விளையாட அழைக்கும் பாடல்களும் பல்வேறு வகையில், சிறந்தனவாக அமைகின்றன. அழகிய சொக்கநாதர் நெல்லையில் வாழ் காந்திமதி அம்மையை அழைக்கிறார். அடியவர் அழைக்க அம்மையோ அப்பனோ உடன்வருவதில்லை. காலம் தாழ்ந்திருக்கும். குழந்தையும் அழைக்க அழைக்கத் தூரத்தே குறும்புகள் செய்திருப்பதைக் கண்டிருப்பாய். இருவகையிலும் அன்பரிடத்தும் அன்னையரிடத்தும் வருகை காலம் தாழ்க்கிறது. அதை உணர்ந்த சொக்க நாதர் அம்மை வராவிட்டால் இன்னின்ன, செய்ய